டான்ஸ் மாஸ்டர்களை ஒதுக்காதீர்கள்.. பிரபுதேவாவுக்கு டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் வேண்டுகோள் !

சென்னை : தமிழ் நடன இயக்குனர்களை ஒதுக்காதீர்கள், அவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று நடன இயக்குனரும், நடிகருமான ராபர்ட் வீடியோவின் மூலம் பிரபுதேவாவிற்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இப்பொழுதும் யூட்டியூபில் சக்கைப்போடு போட்டு வரும் ரவுடி பேபி பாடல் அனைவரும் விரும்பும் ஒரு பாடலாக இருந்து வருகிறது.

தனுஷ் மற்றும் சாய்பல்லவி என இருவரின் அற்புதமான நடனத்தில் உருவான இந்தப் பாடல் உலகெங்கிலும் பிரபலமாகி தற்போது யூட்டியூபில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் தமிழ் பாடல் என்ற பெருமையை கொண்டுள்ளது.

அதிகமாக பார்வையாளர்கள்

அதிகமாக பார்வையாளர்கள்

சமீப காலத்தில் அதிகமாக பார்க்கப்பட்டு அனைத்து மொழி மக்களையும் கவர்ந்து உலக அளவில் பிரபலமான ரவுடி பேபி பாடல் அனைவராலும் பார்க்கப்பட்டு தற்பொழுது யூட்யூபில் 88 கோடி பார்வையாளர்களை தாண்டி பார்க்கப்பட்டு தமிழ் பாடல்களிலேயே மிக அதிகமாக பார்வையாளர்களை கொண்ட பாடல் என்ற சாதனையை இந்த பாடல் பெற்று வருகிறது.

அற்புதமான நடனஅமைப்பு

அற்புதமான நடனஅமைப்பு

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடித்திருந்த மாரி 2 என்ற படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடல் பல்வேறு விதத்திலும் சிறப்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பார்த்திராத பல விதவிதமான உடைகள் ரசிக்கவைக்கும் பேக்ரவுண்ட் செட் ஆப் மற்றும் அற்புதமான நடன அமைப்பு எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய இந்த பாடல் பலராலும் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது.

டான்ஸ் மாஸ்டர் ஜானி

டான்ஸ் மாஸ்டர் ஜானி

இந்த பாடலை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவாவின் முன்னிலையில் ஆந்திராவை சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் ஜானி என்பவர் இந்த பாடலுக்கு நடன அமைப்பு செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தமிழில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் ராபர்ட் மாஸ்டர் பிரபுதேவாவிற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

சிறந்த நடன அமைப்பாளர்

சிறந்த நடன அமைப்பாளர்

அதில் சமீபத்தில் அதிகம் பார்க்கப்பட்டு அனைவராலும் ரசிக்கப்பட்ட என்ற விதத்தில் ரவுடி பேபி பாடலுக்கு சிறந்த நடன அமைப்பாளர்காக பிரபுதேவாவிற்கு விருது வழங்கப்பட்டதாகவும் அது சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்றில் பிரபுதேவா இந்த வெற்றிக்கு முழுக்காரணம் ஜானி மாஸ்டர்தான் எனவும் நான் இதில் ஒன்றுமே செய்யவில்லை என தன்னடக்கத்துடன் சொல்லி இருக்கிறார்.

எனக்கு மிகப்பெரிய கோபம்

எனக்கு மிகப்பெரிய கோபம்

அந்த வீடியோவை பார்த்து கொதித்தெழுந்த ராபர்ட் மாஸ்டர், பிரபு தேவா மாஸ்டரை எனக்கு மிகவும் பிடிக்கும் அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது எனினும் இந்த ரவுடி பேபி பாடல் நடன அமைப்பு விவகாரத்தில் அவர் மீது எனக்கு மிகப்பெரிய கோபம் இருக்கிறது.

மொத்த வாய்ப்பையும்

மொத்த வாய்ப்பையும்

தெலுங்கு உட்பட பல திரைப்படத் துறைகளில் பல நடிகர்களும் அவர்களின் படங்களில் வரும் பாடல்களில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பாடல்களுக்காகவது மற்ற மொழி நடன இயக்குனர்களை நியமித்து அனைவரையும் அரவணைத்து போகும் நிலையில் பிரபுதேவா மாஸ்டர் இந்த படத்தில் தன்னுடன் இருக்கும் தமிழ் நடன இயக்குனர்கள் யாரையும் பயன்படுத்தாமல் மொத்த வாய்ப்பையும் ஜானி மாஸ்டர் ஒருவருக்கு மட்டும் கொடுத்துள்ளதாக ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

வீடியோ பதிவின் மூலம்

வீடியோ பதிவின் மூலம்

இப்போதுள்ள அதிவேக தொழில்நுட்ப காலத்தில் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நிலையில் பிரபுதேவாவின் இது போன்ற செயல்கள் நடனத்தை மட்டுமே நம்பி இருக்கும் தங்களை மனத்தளவில் வேதனைப்படுத்தி இருக்கிறது என பிரபுதேவா மாஸ்டருக்கு தனது ஆதங்கத்தை ஒரு வீடியோ பதிவின் மூலம் சொல்லியுள்ளார்.

வாய்ப்பு கொடுங்கள்

வாய்ப்பு கொடுங்கள்

இவ்வாறு எல்லா வாய்ப்புகளையும் ஒரு நடன இயக்குனருக்கு மற்றும் தராமல் தமிழ், தெலுங்கு என உள்ள பலருக்கும் வாய்ப்பு கொடுங்கள் முக்கியமாக தமிழ் நடன இயக்குனர்கள் பலரும் உங்களிடம் உதவி நடன இயக்குனர்களாக பல ஆண்டுகளாக பணிபுரிந்து உள்ளார்கள் அவர்கள் மிகவும் திறமையானவர்கள் என உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

கொஞ்சம் வாழ விடுங்கள்

கொஞ்சம் வாழ விடுங்கள்

எனவே தயவு செய்து இதுபோன்ற தவறை இனி செய்யாதீர்கள். தமிழ் நடன இயக்குனர்களுக்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பாடலுக்காவது நடனம் அமைக்க வாய்ப்பு அளியுங்கள் தமிழ் நடன இயக்குனர்களையும் கொஞ்சம் வாழ விடுங்கள் என பிரபுதேவாவிடம் ஒரு வீடியோ பதிவின் மூலம் ராபர்ட் மாஸ்டர் தாழ்மையுடன் கேட்டு கொண்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X