"பச்ச கறிய பச்சயா தின்னா அதுக்கு பேரு கொரோனா.. மெட்டு போட்டு பாடகராக மாறிய சாண்டி !
சென்னை : கொரேனா பாதிப்பு குறித்து சாண்டி பாடிய பாடல் வைரலாகி வருகிறது.
நடன இயக்குனராக நமக்கு தெரிந்தவர் தான் சாண்டி. அவரது உண்மையான பெயர் சந்தோஷ் குமார் .."மானாட மயிலாட "என்னும் நடன நிகழ்ச்சியில் கோரியோக்ரபராக பணியாற்றினார். பிறகு "கிங்ஸ் அப் டான்ஸ் "என்ற நிகழ்ச்சியிலும் நடுவராகவும் பணியாற்றினார்.

நடனத்துறையிலே அவரை பார்த்து பழகிய நமக்கு "பிக் பாஸ் "வீட்டில் சிரித்துக்கொண்டும், கலாய்த்துக்கொண்டும் இருந்தார். பிக் பாஸ் இல்லத்தில் பல சுவாரஸ்யமான பொழுதுபோக்குக்கு இவர் தான் காரணகர்த்தாவாக இருந்தார்.மேலும், இவரது டான்ஸ் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் இருக்கும். அவரது நடனமும்,பேச்சும் குழந்தைகளுக்கு பிடிக்கும் பாணியில் இருப்பது இவரது கூடுதல் பலம் பெரியவர்களை விட குட்டீஸ் பேன்ஸ் தான் இவருக்கு அதிகம்.
அவருக்கு நடனம் மட்டும் தான் ஆடத் தெரியும் என்று நினைத்த நமக்கு பெரும் ஷாக் கொடுத்திருக்கிறார் நம் சாண்டி. தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக இருக்கக்கூடிய விஷயம் கொரோனா மட்டும் தான். அதிலிருந்து நாம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்ன என்ன செய்ய வேண்டும் என்று குழந்தைகளுக்கு பிடித்த பாணியில் பாடலாக பாடியுள்ளார் ...
"பச்ச கறிய பச்சயா தின்னா அதுக்கு பேரு கொரோனா கொச கொசனு காலி பண்ண இந்தியாகுள்ள வரானா.. என்று மெட்டுபோட்டு பாடி இருக்கிறார் சாண்டி. பாடலின் இறுதியில் நிலவேம்பு கஷாயம் குடிச்சா கொரோனா வராதா என்ற கேள்விக்கு நீ வீட்ல இருந்தா கொரோனா வராது ஓகே வா என்பது போல் இந்த பாடல் அமைத்திருக்கிறார்.

இந்த பாடலின் வரிகள் குட்டீஸ்க்கு ஏற்றவாறு இருப்பதுதான் பாடலின் ஹைலைட். பாடலின் இடை இடையே தன் நடனத்தால் கலக்கி இருக்கிறார் சாண்டி. மேலும் தன் குழந்தையுடன் இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே பார்வையாளர்களை கவர்ந்து ட்ரெண்டானது. இதுவரை 24ஆயிரம் பார்வையாளர்களை இந்த பாடல் கவர்ந்துள்ளது.
சாண்டி நல்லா ஆடுவாரு என்பது நம் அனைவருக்கும் தெரியும், ஆனால், அவர் செம்மையா பாடுவது என்பது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது கானா பாடி அசத்தி இருப்பாரு. ஆனால் இவ்வளவு அழகா, இதுவும் மெலோடியா பாடுவாரு என்பது, இப்போதுதான் தெரியுது என்று பலரும் கூறியுள்ளனர். இதனால் குஷியான சாண்டி ரசிகர்கள் இந்த பாடலை சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











