''காலா'' கெட்டப்பில் சாண்டி.. கருப்பு உழைப்போட வண்ணம் .. வைரலாகும் பிக்ஸ்!
சென்னை : பிரபல நடன அமைப்பாளர் சாண்டி இப்பொழுது காலா ரஜினிகாந்த் கெட்டப்பில் கருப்பு சட்டையும் கருப்பு வேஷ்டியும் அணிந்து கொண்டு செம போஸ் கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல கோடி இதயங்களை வென்ற சாண்டி இப்பொழுது பிக் பாஸ் சீசன் 4க்கு கோரியோகிராஃப் செய்து அசத்தியுள்ளார்.
தான் இருக்கும் இடத்தை எப்பொழுதும் கலகலப்பாக வைத்துக்கொள்ளும் சாண்டி சமீபத்தில் ஆயுத பூஜை நிகழ்ச்சிக்காக கலந்துகொண்டதில் பிளாக் சட்டையும் வேட்டியும் அணிந்து கொண்டு காலா ரஜினி கெட்டப்பில் இருக்கின்ற புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

காமெடி செய்வதிலும்
பிரபல நடன அமைப்பாளரான சாண்டி நடனம் மட்டுமல்லாமல் மக்களை ரசிக்க வைக்கும் வகையில் காமெடி செய்வதிலும் வல்லவர் ஆவார். பிக் பாஸ் இல்லத்தில் அவ்வப்போது பாட்டுப்பாடி நகைச்சுவையாக பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

காமெடியை இணைத்து
சாண்டியின் நடனத்தில் ஒரு தனி யுக்கி இருக்கும், நடனத்தில் காமெடியை இணைத்து தனக்கே உரித்தான ஸ்டைலில் கோரியோகிராஃபி செய்து அசத்தி வரும் சாண்டிக்கு இன்று வரை ரசிகர்கள் ஏராளமாக இருந்து வருகின்றனர்.

விரும்பும் போட்டியாளர்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலமான முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ள இவர் சென்ற ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஆடிப் பாடி மற்றவர்களை போல செய்து காட்டி அசத்தியதுடன் அனைவரும் விரும்பும் போட்டியாளராக இருந்தார்.

நடக்குமா இல்லையா
சில திரைப்படங்களில் பாடல்களில் வந்து செல்லும் சாண்டி தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் உள்ளார். பிக் பாஸ் சீசன் 3 ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றிகரமான சீசனாக இருந்த நிலையில் இப்போது நான்காவது சீசன் தொடங்கி உள்ளது. ஆரம்பத்திலிருந்தே பிக் பாஸ் சீசன் 4 நடக்குமா இல்லையா என்பதைப் பற்றிய சந்தேகங்கள் பலருக்கும் எழுந்து வந்த நிலையில், இப்பொழுது தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

ப்ரோமோவில் நடனம் ஆடி
இது வரை இல்லாத வகையில் இந்த சீசனில் நடனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ப்ரோமோ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில், சென்ற சீசனில் இல்லாத அளவிற்கு கமல்ஹாசன் ப்ரோமோவில் நடனம் ஆடி அசத்தி இருந்தார்.

காலா ரஜினி கெட்டப்பில்
இந்த நிலையில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்ட சாண்டி அதில் கருப்பு சட்டை கருப்பு வேட்டி அணிந்து கொண்டு காலா படத்தில் வரும் ரஜினிகாந்த் கெட்டப்பில் அசத்தலாக நின்றுகொண்டு " கருப்பு உழைப்போட வண்ணம்" என தலைப்பிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்த அனைவரும் அசந்து போயுள்ளனர். இந்த புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











