மீசை, தாடியுடன் ஹீரோ போல மாஸ் காட்டும் சாண்டி.. நச்சுன்னு ஒரு போஸ்!
சென்னை : முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு கோரியோகிராபி செய்து வந்த சாண்டி மாஸ்டர் இப்பொழுது கதாநாயகனாகவும் களமிறங்கி உள்ளார்.
நகைச்சுவை நடனம் என பல திறமைகள் கொண்டுள்ள சாண்டி மாஸ்டருக்கு பல கோடி ரசிகர்கள் இருந்துவரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னரப்பாகவும் வந்தார்.
இந்த நிலையில் இப்பொழுது மீசை தாடி பிளேசர் உடன் செம மாஸாக ஹீரோபோல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சாண்டி லைக்குகளை அள்ளி வருகிறார்.

கோரியோகிராபி செய்து
பிரபலமான பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராகவும் போட்டியாளராகவும் கலந்து கொண்டு அதில் நகைச்சுவை கலந்த நடனத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வந்த சாண்டி மாஸ்டர் இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களின் பல திரைப்படங்களுக்கு கோரியோகிராபி செய்து வருகிறார்.

வித்தியாசமான நடனத்துடன்
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் சாட்பட்டா திரைப்படத்திற்கும் கோரியோகிராபி செய்துவரும் சாண்டி சமீப காலமாகவே தமிழில் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 ப்ரோமோவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வித்தியாசமான நடனத்துடன் கோரியோகிராபி செய்து அசத்தி இருப்பார்.

ரன்னரப் பட்டத்தை
நடன இயக்குனர்களிடம் இருந்து சற்று வித்தியாசமாகவே காணப்படும் சாண்டி பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு தனது கலகலப்பான பேச்சின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் ரன்னரப் பட்டத்தையும் தட்டி சென்றார்.

கதாநாயகனாக அறிமுகம்
இந்த நிலையில் அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கும் திரில்லர் திரைப்படத்தில் சாண்டி கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். முழுக்க முழுக்க ஹாரர் திரைப்படமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப்படம் ஒரே ஒரு வீட்டுக்குள் நடைபெறுகிற கதை .

ஸ்ருதி ஹீரோயினாக
ஹாரர் திரைப்படங்களுக்கு மக்களிடையே எப்பொழுதும் வரவேற்பு இருந்து வரும் நிலையில் சாண்டி மாஸ்டரைத் தொடர்ந்து பிரபல நடிகையும் தொகுப்பாளினியுமான பிக் பாஸ் ரேஷ்மா இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஸ்ருதி ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.

மாஸான லுக்கில்
விரைவில் தமிழ் சினிமாவை கலக்க ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் சாண்டி மாஸ்டர் இதுவரை மீசையில்லாமல் மட்டுமே வலம் வந்த நிலையில் இப்பொழுது தாடி மீசை என பார்க்கவே மாஸான லுக்கில் பிளேசர் அணிந்து கொண்டு நச்சுனு போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த பலரும் ஒரு சாயலில் சிம்பு மாதிரி இருக்கின்றீர்கள் எனவும் இன்னும் சிலர் மலையாள நடிகர் நிவின் பாலி மாதிரி இருக்கின்றீர்கள் எனவும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











