மீசைய முறுக்கி.. செம்ம கெத்து.. சாண்டி மாஸ்டரின் வேறலெவல் புகைப்படம்!
சென்னை : தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் காமெடியுடன் கலந்த நடனத்தை அனைவரும் ரசிக்கும் வகையில் அமைத்து வரும் சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடன அமைப்பாளராக இருந்து வருகிறார்.
Recommended Video
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்து வந்த சாண்டி பின் வேற லெவலில் வைரல் ஆனார்.
இந்நிலையில் இதுவரை சாண்டி மாஸ்டரை அனைவரும் மீசையில்லாமல் பார்த்து வந்த நிலையில் தற்போது, மீசையும் தாடியுடன் செம கெத்தாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

தனித்துவமான நடனம்
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடன அமைப்பாளர்களில் மிகப்பிரபலமானவராக இருந்து வரும் சாண்டி மாஸ்டர், பல தொலைக்காட்சிகளில் தோன்றி தனது தனித்துவமான நடன அமைப்பின் மூலம் பலரையும் கவர்ந்து பல ரசிகர்களைக் கொண்டு வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் ஷோ
இவர் நடனம் அமைத்த பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி மிகப் பிரபலமாக பேசப்பட்ட நிலையில், இவரின் தனித்துவமான காமெடி கலந்த நடனங்கள் இன்றளவும் பலரையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்து வருகிறது. திரைப்படங்களின் மூலமும் நடன போட்டிகளின் மூலமும் அனைவருக்கும் பரிச்சயமான சாண்டி சமீபத்தில் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு தனது அசாத்திய காமெடி பேச்சின் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்து பலரது இதயங்களையும் வென்று ரன்னராக மகுடம் சூடினார்.

செம கெத்தாக
சிறந்த நடன அமைப்பாளராகவும், அதீத நகைச்சுவை உணர்வு கொண்ட திறமையான காமெடியனாகவும் நம் அனைவருக்கும் பரிச்சயமான சாண்டியை இதுவரை மீசையும் தாடியும் இல்லாமலேயே பார்த்து வந்த நம் அனைவரையும் ஷாக்காகும் வகையில் மீசை தாடியுடன் செம கெத்தாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

லாலாவுடன் கொஞ்சி விளையாடும்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் கர்ணன் திரைப்படத்திற்கு நடன அமைப்பு செய்துவரும் சாண்டி சமூக வலைதளங்களிலும் மிக சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இந்நிலையில் லாக் டவுனில், தனது மனைவியுடன் இணைந்து ஆடிய டான்ஸ் வீடியோக்களையும், மகள் லாலாவுடன் கொஞ்சி விளையாடும் க்யூட்டான வீடியோக்களையும் பகிர்ந்து வந்த சாண்டி இப்பொழுது தாடியும் மீசையுமாக புகை பிடித்தவாறு செம மாஸாகவும், செம கெத்தாகவும் அனைவரையும் மிரட்டும் தோணியில் இதுவரை யாரும் கண்டிராத புது விதமான கெட்டப்பில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

நீங்க பார்ப்பதற்கு
இவ்வாறு சாண்டி வெளியிட்ட இந்த புகைப்படங்களை பார்த்த பல்வேறு பிரபலங்களும், இந்த லுக்கில் நீங்க பார்ப்பதற்கு விஜய் மாதிரியே இருக்கீங்க என பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











