ஆத்தாடி.. சைக்கோ கில்லரை விட பயங்கரமா இருக்கே? சாண்டியின் அடுத்த பட போஸ்டர்!

சென்னை: லியோ படத்தில் சீரியல் கில்லராக வந்த சாண்டி புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்தின் மிரட்டலான போஸ்டர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படத்தில் விஜய், த்ரிஷா, பிரியா மணி, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சாண்டி என பலர் நடித்துள்ளனர்.

Dance master sandy next kannada movie new poster

கடந்த மாதம் வெளியான இத்திரைப்படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், வசூலில் நன்றாக கல்லாக் கட்டியது.

சாண்டி மாஸ்டர்: நடன இயக்குநரான சாண்டி மாஸ்டர் லியோ படத்தில் சைக்கோ த்ரில்லராக நடித்திருந்தார். படம் ஆரம்பிக்கும் போது ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும், இவரின் சைக்கோ தனமான நடிப்பு பாராட்டை பெற்றது. கண்களை உருட்டி “சாக்லேட் காபி… சாக்லேட் காபி…” என்று பேசியதைப் பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள்.

சாண்டியின் புது லுக்: லியோ படத்தை தொடர்ந்து சாண்டி மாஸ்டன் புகழ் உச்சமடைந்து கன்னட இயக்குனர் ஷூன்யா இயக்கும் படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். 'ரோசி’ தலைப்பு கொண்ட இந்த படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது.

ரோசி: இந்த முதல் லுக் போஸ்டரில் சாண்டி மாஸ்டர் திருநங்கை போல மிகவும் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சி அளித்துள்ளார். இந்த படத்தில் ஆண்டாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இது அவருக்கு சினிமாவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் லியோ படத்தை விட பயங்கரமா இருக்கே என்று கருத்துக்கூறி வருகின்றனர். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடும்.

மிரட்டும் சாண்டி: சின்னத்திரை தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர் சாண்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் வரை சென்று சும்மா கெத்து காட்டினார். அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். இருந்தாலும் அவரால் நடிகர் என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. அதன்பிறகு விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுக்கு டான்ஸ் மாஸ்டராக தன் வேலையை தொடங்கி சாண்டி லியோ படத்தில் வில்லனாக மிரட்டினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X