பழைய காதலியை பார்த்தால் 'ஜிங்' ஃபீல் வரணுமா.. உச்ச நட்சத்திரம் அட்வைசால் ஆடிப்போன நடன இயக்குநர்!

சென்னை: டான்ஸ் மாஸ்டர் சாந்தி தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர், நடிகை மற்றும் சின்னத்திரை நடிகை என்று பல்வேறு தளங்களில் பயணித்து வருகிறார். சின்னத்திரையில் மெட்டி ஒலி சீரியலின் டைட்டில் பாடலுக்கு நடனமாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களில் பணிபுரிந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை சென்றடைந்த சாந்தி, அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி செயல்பட்டு வருகிறார். பல பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் சாந்தி நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் காதல் திருமணம் குறித்து பேசியதை தற்போது பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

Rajinikanth master Shanthi tamil cinema

நடன இயக்குநர் சாந்தி: நடன இயக்குனர். நடிகை மற்றும் சீரியல் நடிகை என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருபவர் டான்ஸ் மாஸ்டர் சாந்தி. தன்னுடைய பத்தாவது வயதிலேயே கிழக்கு வாசல் என்ற படத்தில் நடன கலைஞராக இவர் தன்னுடைய என்ட்ரியை சினிமாவில் துவங்கியுள்ளார். தொடர்ந்து பல படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் நடனக் கலைஞராகவும் பணிபுரிந்துள்ள சாந்தி, சின்ன திரையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மெட்டி ஒலி சீரியலின் டைட்டில் பாடலில் நடனமாடியுள்ளார். அம்மி அம்மி அம்மி மிதித்து என்று இவர் கால்தூக்கி ஆடி ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டார்.

மெட்டி ஒலி சாந்தி: இதே போல சில சீரியல்களில் டைட்டில் பாடல்களில் ஆட்டம் போட்டுள்ள சாந்தி, தொடர்ந்து சீரியல்களில் நடிக்கவும் செய்துள்ளார். டான்ஸ் மாஸ்டர் ஆகவும் நடிகையாகவும் தொடர்ந்து பயணித்து வரும் சாந்தி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடனமாடியுள்ளார். இதனிடையே அடுத்தடுத்து தன்னுடைய பேட்டிகளில் தன்னுடைய 30 ஆண்டுகளை தாண்டிய சினிமா பயணம் குறித்த பல சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகிறார். இதனிடையே, தன்னுடைய சமீபத்திய பேட்டியில் சூப்பர் ஸ்டார் குறித்த தன்னுடைய அனுபவங்களை சுவாரசியமாக பதிவிட்டுள்ளார்.

காதலித்தவர்களுடன் திருமணம்: பாடல் ஒன்றுக்கு சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஆட்டம் போட்ட நிலையில் தன்னிடம் தான் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டதாகவும் தான் அதற்கு ஏன் சார் இப்படி கேட்கிறீர்கள் என்று பதிலுக்கு கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு காதலிக்கலாம் ஆனால் காதலித்தவர்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த பதில் தனக்கும் உடனிருந்தவர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்ததாகவும் சாந்தி தெரிவித்துள்ளார். இதற்கு விளக்கம் அளித்த அவர், திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால்தான் காதலியை பார்க்கும்போது நமக்குள் ஒரு 'ஜிங்' என்று உணர்வு தோன்றும் என்று கூறியதாகவும் சாந்தி பகிர்ந்துள்ளார்.

ரஜினி தந்த விளக்கம்: இதன்மூலம் நிறைவேறாத அந்த காதல் உயிர்ப்புடன் இருக்கும் என்றும் ரஜினிகாந்த் தன்னிடம் கூறியதாக சாந்தி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு இதுபோன்ற காதல் இருக்கிறதா என்று தான் கேள்வி கேட்டதாகவும் சாந்தி மேலும் தெரிவித்துள்ளார். விஜய் டிவியின் சீரியல்கள். நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் சாந்தி கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவரது பெர்ஃபாமன்ஸ் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்த விமர்சனங்களையும் பெற்றுக் கொடுத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X