கௌதமியின் இடத்தில் டான்ஸ் மாஸ்டரின் மனைவி.. கமலுக்கு இப்போ எல்லாமே இவர் தானாம்!
சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு வலது கரமாக இருக்கும் பிரபலம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது.
உலகநாயகன் கமலுக்கு தெரியாத வேலையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சினிமாவில் அனைத்தையும் கரைத்துக்குடித்தவர் நடிகர் கமல்ஹாசன்.

சினிமா ஒரு புறம், அரசியல் ஒருபுறம் என இரண்டையும் கனகச்சிதமாக செய்து வருகிறார்.
உலகநாயகன்: நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்தில் முடித்துள்ளார். அடுத்து பிரபாஸின் 'கல்கி 2829 ஏ.டி படத்திலும் ஹெச்.வினோத் மற்றும் மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிமுகத் தோற்றம் கமல்ஹாசன் பிறந்த நாள் அன்று வெளியானது.
தக் லைஃப்: 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ள KH234 படத்திற்க தக் லைஃப் (Thug Life) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்ட வீடியோவில், என் பேரு ரங்க ராயர் சக்திவேல் நாயக்கன். காயல்பட்டினக்காரன் என கமல் தனக்கே உரிய ஸ்டைலில் பேசியிருந்தார். மேலும், இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி, நடிகர் துல்கர் சல்மான், நடிகை த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
கமலின் வலது கரம்: இந்நிலையில், கமலுக்கு தற்போது வலது கரமாக இருக்கும் பிரபலம் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் பிரபலமான டான்ஸ் மாஸ்டரின் மனைவி அமிர்தா ராம் என்பதும் இவர் பிக் பாஸ், இந்தியன் 2, தக் லைஃப் படங்களுக்கு இவர் தான் ஆடை வடிவமைப்பாளராக இருப்பதாக கூறப்படுகிறது. ராஜ் டிவியில் புரோடியூசராக இருந்த இவர், பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
ஹே ராம் படத்தில்: நடிகர் கமல், நடன கலைஞரான வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். பிறகு, வாணி ஆடை வடிவமைப்பாளராக பல படங்களில் பணியாற்றினார். இதையடுத்து, இருவரும் விவாகரத்து பெற்றதை அடுத்து சரிகாவை திருமணம் செய்து கொண்டார். நடிகை சரிகா, கமலின் ஹே ராம் திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார்.
கௌதமி இடத்தில்: இந்த தம்பதிக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் பிறந்த நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். சரிகா, கமலின் ஹே ராம் திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். இதையடுத்து, நடிகை கௌதமியுடன் லின் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த போது,அவர் வாழ்க்கையிலும், பிசினஸிலும் பக்க பலமாக இருந்தார். கௌதமி விட்டுப்போன இடத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக இருக்கிறார் அமிர்தா.


Click it and Unblock the Notifications











