twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ''வாட் ஏ மெடிக்கல் மிராக்கிள்''... நம்ம ஊர் நாயகர்களின் 'நக நக' டான்ஸ்!

    By Sudha
    |

    சென்னை: ஒரு நாள் இரவு, எதேச்சையாக ஒரு டிவி சானலை பார்க்க நேர்ந்தது. சானல் பெயர் தெரியவில்லை... ஆனால் அந்த சானலில் ஒரு நாயகன் ஆடிய டான்ஸைப் பார்த்தோது வாட் ஏ மெடிக்கல் மிராக்கிள் என்று பயந்து போய் சொல்லத் தோன்றியது.. அப்படி ஒரு ஆட்டம்.. அபார ஆட்டம்.

    அந்தக் காலத்துப் படங்களின் டான்ஸைப் பார்த்தால் என்னா ஒரு பீலிங் வரும் தெரியுமா... சொல்லவே முடியாது.. காரணம், வாய் ஒட்டிக்கும், மூளை பிச்சுக்கும்.. மூடு முட்டிக்கும்.

    இன்றைய நாயகர்கள் ஆடும் டான்ஸுடன் அதைக் கம்பேர் பண்ண முடியாதுதான்.. ஆனால் இன்றைய டான்ஸைப் பார்க்கும்போது அந்தக் காலத்து டான்ஸர்கள், அதாவது நடிகர்கள், ரொம்பவே மெனக்கெட்டு, தறிகெட்டு ஆடியதைப் பார்த்து நெஞ்சார ரசிக்கலாம்.

    ப்ப்ப்பா... யாருடா இது...

    ப்ப்ப்பா... யாருடா இது...

    அந்தக் காலத்து எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் ஆடிய டான்ஸ் பார்ப்பதற்கே நமக்கு தனித் திறமை வேண்டும். அந்த குண்டு உடம்புகளைத் தூக்கிக் கொண்டு, காஸ்ட்யூம் டிசைனர் டிசைன் செய்து, டெய்லர் தைத்துக் கொடுத்த அந்த டைட்டான டிரஸ்ஸை மாட்டிக் கொண்டு.. அதுவும் புல் ஹேண்ட் சட்டையை மடக்கி விட்டு.. டக் இன் பண்ணி.. காலில் பாலிஷ் போட்ட ஷூவை அணிந்து கொண்டு டூயட் ஆடும் பாங்கு இருக்கே...ப்ப்பா யாருடா இது என்று ஆச்சரியப்படத் தோன்றும்.

    சைடிலேயே ஓடுவாங்க

    சைடிலேயே ஓடுவாங்க

    அந்தக் காலத்து நாயகர்களில் ஜெய்சங்கர் டான்ஸ்தான் செமத்தியாக இருக்கும். மனுஷன் சைடு வாங்கியெல்லாம் ஓடியாடி கலக்கியிருப்பார். அடுத்தமுறை இவரது டான்ஸைப் பார்க்கும்போது மறக்காமல் அவர் சைட் வாங்கி, ஹீரோயினை ஓவர்டேக் செய்து ஓடுவதை ரெண்டு கண்ணையும் அந்தாண்டை, இந்தாண்டை நகட்டாமல் ஸ்டெடி கேமில் வைத்துப் பார்க்கத் தவறாதீர்கள்.

    ரவிச்சந்திரன் டான்ஸ்.. ரகளை பாஸ்...

    ரவிச்சந்திரன் டான்ஸ்.. ரகளை பாஸ்...

    அதேபோல ரவிச்சந்திரன் டான்ஸ் பார்த்தீங்கன்னா.. அப்படியே பத்திக்கும் ஒரு உற்சாகம்.. ஸ்டைலாக நடந்து வருவார்.. திடீரென உடலை வில்லைப் போல வளைத்து தலையை காலுக்குக் கீழே கொண்டு போய் அப்படியே கண்ணை மட்டும் ஜோதிகா ரேஞ்சுக்கு நவரசங்களையும் காட்டி ஹீரோயினைப் பார்ப்பார் பாருங்க.. செத்தாண்டா சேகரு என்று சொல்லத் தவற மாட்டீர்கள்... ஆனாலும் இவரிடம் ஒரு பெண்மை கலந்த நளினத்தை டான்ஸில் பார்க்கலாம்..

    டி.ஆர்.. டான்ஸ்.. செம உடான்ஸ்...

    டி.ஆர்.. டான்ஸ்.. செம உடான்ஸ்...

    டி.ஆர். கூட டான்ஸ் ஆடியிருப்பார். என்ன.. இவர் ஆடும்போது கூடவே அவரது தாடியையும் சேர்த்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டுவிப்பார்.. இடுப்பை மட்டும் ஆட்டவே மாட்டார்... ஒரு படத்தில் மும்தாஜுடன் இவர் போட்ட ஆட்டம்தான் இன்று வரை கோலிவுட்டில் ஒரு மார்க்கமான ஆட்டம் என்ற சாதனையை தக்க வைத்திருக்கிறது... தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி பாட்டில் இவரது உணர்ச்சிப் பெருக்கல்.. கூட்டிக் கழித்துப் பார்த்தால்.. இதுவரை யாரும் காட்டாதது.. கூட்டிப் பெருக்காதது...

    பாக்யராஜ்...

    பாக்யராஜ்...

    பக்கத்தில் பயங்கர கவர்ச்சியுடன் நாயகியோ அல்லது கவர்ச்சிக் கன்னியோ ஆடிக் கொண்டிருந்தாலும் கூட கண்களை மட்டும் உருட்டி விட்டு அவர் பாட்டுக்குக் கண்டு கொள்ளாமல் போய் விடுவார்... சின்ன வீடு படம் பார்த்தால் இதை நன்றாக உணர முடியும். உடல் அசைவுகளை விட உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரே நடிகர் பாக்யராஜ்தான். இவரது திரைக்கதையைப் போலவே இவரது நடன அசைவும் அப்படி கச்சிதமாக இருக்கும்... ஆரோக்கியமான டான்ஸர் இவர் மட்டும்தான்.

    ராமராஜன்

    ராமராஜன்

    அது பாட்டுக்கு ஆடும், மாடும் அடித்துப் பிய்த்துக் கொண்டு போகும். கூடவே கேமரா படு வேகமாக உருண்டடித்துக் கொண்டு ஓடும்.. கூடவே வயல் வெளிகள், வாய்க்கால்கள், எருமை மாடுகள், பசு மாடுகள் சிலுசிலுவென ஓடிக் கொண்டிருக்கும்.. நிஷாந்தி முகத்தை ஒரு கையால் தாங்கி மறைத்தபடி சிரித்துக் கொண்டிருப்பார்.. எங்கய்யா ஹீரோ என்று தேடிப் பார்த்தால் வேட்டியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு ராமராஜனும் ரொம்ப தூரத்தில் ஓடி வந்து கொண்டிருப்பார்.. பட்டு வேட்டி சட்டை போட்டுக் கொண்டு டூயட் பாடிய, கையில் மலர்ச்செண்டோடு டூயட் பாடிய ஹீரோ இவராகத்தான் இருக்க முடியும்.

    இப்ப உள்ளவங்க மட்டும் என்னவாம்...

    இப்ப உள்ளவங்க மட்டும் என்னவாம்...

    இவர்களைக் கிண்டலடிக்க முடியாதுதான்.. காரணம், இவர்கள் அடிப்படையில் டான்ஸர்கள் அல்ல.. நடிகர்கள்தான். கஷ்டப்பட்டு ஆட வைத்து அதகளப்படுத்தியது அந்தக் காலத்து புலியூர் அக்காவும் மற்றவர்களும்தான். அதேசமயம் இந்தக் காலத்திலும் கூட அந்தக் காலத்து டான்ஸை பீட் செய்யும் நடிகர்கள் நிறையவே உள்ளனர்.

    நளினம் கம்மி.. நாட்டியம் நிறைய

    நளினம் கம்மி.. நாட்டியம் நிறைய

    இப்போதைய நடிகர்கள் அனைவருமே டான்ஸ் ஆடுகிறார்கள் என்றாலும் நளினம் என்னவோ குறைவுதான்.. விஜய் டான்ஸ் பார்க்க இயல்பாக இருக்கும்... அஜீத் கஷ்டப்படுவது அவருக்கே தெரியும்... சூர்யா கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடியது உலகுக்கே தெரியும்.. ரவிகிருஷ்ணா ஆடியது டான்ஸா என்று யாருக்குமே இன்னும் புரியவில்லை...

    பிளட் வெளியே தெறிக்கும் அளவுக்கு

    பிளட் வெளியே தெறிக்கும் அளவுக்கு

    சிம்பு முன்பு ஆடிய டான்ஸைப் பார்த்தால் ரத்தம் எங்கே தெறித்து வெளியே வந்து விடுமோ என்று அதைப் பார்த்தவர்கள் அஞ்சும் அளவுக்கு ரொம்ப முரட்டுத்தனமாக ஆடுவார். அதிலும் கை விரல்களை ஒரே சமயத்தில் பல கோணங்களில் மடக்கி முடுக்கி விரித்து அவர் பல ஆங்கிள்களைக் காட்டுவார் பாருங்க... ம்ஹூம்... சான்ஸே இல்லை.

    வால்யூம் வைக்காமல் பாருங்களேன்...

    வால்யூம் வைக்காமல் பாருங்களேன்...

    இந்த மாதிரியான டான்ஸைப் பார்க்கும்போது டிவியில் வால்யூம் வைக்காமல் பாருங்களேன்... செம காமெடியாக இருக்கும்...

    வால்யூம் வைத்துப் பார்த்தால்..

    வால்யூம் வைத்துப் பார்த்தால்..

    அப்படிப் பார்த்தால் நம்மோட மூளைக்குப் போகும் ரத்த வால்வுகள் தறிகெட்டு பிஞ்சு போகும்..

    English summary
    Dance and Tamil cinema heroes are integrated always. But there are lot of humor and 'terror' we can see in these songs.!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X