அப்பா அப்படி இல்ல இப்படி…சாண்டிக்கு டான்ஸ் கற்றுத்தரும் செல்ல மகள் !
சென்னை : நடன இயக்குனர் சாண்டி தனது மகள் லாலாவுடன் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அப்பா அப்படி இல்ல இப்படி ஆடனும் என்று கைகளை நீட்டி அப்படி இப்படி ஆடுகிறார்
இணையத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோ அனைவரின் லைக்குகளைவும் பெற்று வைரலாகி வருகிறது.

மானாட மயிலாட நிகழ்ச்சியில்
நடன இயக்குனர் கலா மாஸ்டரின் மாணவர் சாண்டி. இவர் திரைப்படங்கள், நடன நிகழ்ச்சிகள் மேலும் பல மேடை நிகழ்ச்கிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரிடம் உதவி நடன ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.

கிஸ் ஆப் டான்ஸ்
இதையடுத்து, தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். பின்னர் விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியிலும், கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.
பிரபலமானார்
இதையடுத்தே அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அந்த வீட்டில் இருந்த அனைவரையும் தனது நகைச்சுவை உணர்வால் சிரிக்கவைத்தார். இதனால் மக்கள் மத்தியில் இவருக்கு பெரும் ஆதரவு பெற்று இறுதிவரை பிக் பாஸ் இல்லத்தில் இருந்தார். அந்த சீசனில் முதல் இடத்தை முகேன் ராவும், இரண்டாவது இடத்தை சாண்டியும் பெற்றனர்.

க்யூட் டான்ஸ்
இந்நிலையில், சாண்டி தனது மகள் லாலாவுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் க்யூட் வீடியோவை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சின்ன சின்ன நடன அசைவுகளை சாண்டி செய்து காட்ட அவரது செல்ல மகளோ அடபோப்பா அப்படி இல்ல இப்படி டான்ஸ் ஆடனும்னு அப்பாவுக்கே டான்ஸ் கற்றுத்தருகிறார் லாலா, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











