பிரபல நடனக்கலைஞர் மாரடைப்பால் உயிரிழந்தார்… திரைப்பிரபலங்கள் இரங்கல்!

சென்னை : பத்ம விபூஷன் விருது பெற்ற பிரபல கதக் நடனக் கலைஞரான பிர்ஜூ மகாராஜ் மாரடைப்பின் காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 83.

பண்டிட் பிர்ஜூ மஹாராஜின் கலை சேவையை பாராட்டி, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதினை கடந்த 1986ம் ஆண்டு வழங்கி இந்திய அரசு கௌரவித்தது.

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்றுள்ள 'உன்னை காணாத நான் இங்கு பாடலுக்கு கதக் நடன வடிவமைப்பு செய்தவர் பண்டிட் பிர்ஜூ மகாராஜ். அந்த படத்திற்காக இவர் தேசிய விருது பெற்றவர்.

கமல் இரங்கல்

கமல் இரங்கல்

இவரது மறைவுக் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தலைவருமான கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார். ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும், விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, 'உன்னை காணாது நான் இன்று நானில்லையே'

ஈடு செய்யமுடியாத இழப்பு

ஈடு செய்யமுடியாத இழப்பு

பாலிவுட் பிரபல நடிகை ஹேம மாலினி, ஸ்ரீ பிர்ஜு மகராஜ் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தனது இறுதி மூச்சு உள்ளவரை அவரது கணுக்கால்களில் குங்குருக்கள் இருந்தன. நான் அவரை கதக் நடனத்தின் மாபெரும் வல்லுநராகவும் மதிக்கிறேன், அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

வேதனை அளிக்கிறது

வேதனை அளிக்கிறது

பாலிவுட் பிரபல நடிகை மாதுரி தீட்சித் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதில், அவர் ஒரு ஜாம்பவான், அவர் எனக்கு குரு மட்டுமல்ல நல்ல நண்பரும் கூட. நடனத்தில் பல அபிநய நுணுக்கங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார், அவரின் வேடிக்கையான பேச்சை கேட்டு பலமுறை நான் சிரித்து இருக்கிறேன். அவர் இன்று நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டது வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்லும் ஒரு பாரம்பரியத்தையும் விட்டுச் சென்றுள்ளார். பணிவு, நேர்த்தி மற்றும் கருணையுடன் நீங்கள் எனக்கு கற்பித்த நடனத்திற்கு நன்றி மகராஜ்ஜி.என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

இரங்கல்

இரங்கல்

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதக் நடனக் கலைஞரான பிர்ஜூ மகாராஜ் இரங்கல் தெரிவித்து. இவருடன் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X