டான்சர் ரமேஷ் தற்கொலையில் சந்தேகம்.. அவரை தேடி வந்த 4 பேர் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்!
சென்னை : டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என குடும்பத்தினர் கூறி உள்ளதால், இது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சோஷியல் மீடியாவில் மைக்கேல் ஜாக்சன் போல ஸ்டைலாக டான்ஸ் ஆடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் டான்ஸர் ராமேஷ்.
இதன் மூலம் பிரபலமான டான்ஸர் ரமேஷ், துணிவு படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார்.

டான்ஸர் ரமேஷ்
சென்னை மூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த டான்ஸர் ரமேஷ் ஜனவரி 27ந் தேதி அவரின் பிறந்த நாள் அன்று தற்கொலை செய்து கொண்டார். ரமேஷிற்கு சித்ரா,இன்பவள்ளி என இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், இரண்டாவது மனைவி இன்பவள்ளியின் வீட்டின் 10வது மாடிக்கு சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்டார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, இரண்டாவது மனைவி இன்பவள்ளியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர், ரமேஷிற்கு பிறந்தநாள் என்பதால், நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க பணம் கேட்டதாகவும், பணம் இல்லாததால் பணம் தரவில்லை. இதனால் ஏற்பட்ட மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து இருந்தார்.

தற்கொலைக்கு வாய்ப்பே இல்லை
ஆனால், ரமேஷின் முதல் மனைவி சித்ரா, அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை அவருக்கு மரணம் என்றாலே பயம், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், இன்பவள்ளிக்கு பல ரௌடிகளை தெரியும், என் மகளின் திருமணத்திற்கு அவர் வந்ததற்காக ரௌடிகளை வைத்து அடித்தார்.அதன் பிறகு பல நாட்கள் அந்த வீட்டு பக்கமே போகாமல் இருந்தார். ஜனவரி 5ந் தேதி தான் மீண்டும் இரண்டாவது மனைவி வீட்டுக்கு சென்றார். சம்பவத்தன்று இன்பவள்ளிக்கும் எனது கணவருக்கும் ஏதோ சண்டை நடந்துள்ளது என்றார்.

அந்த நான்கு பேர் யார்?
இந்நிலையில், ரமேஷின் தம்பி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், குடிப்பதற்கு காசு கேட்டு தற்கொலை செய்து கொள்பவர் என் அண்ணன் இல்லை, அவர் எவ்வுளவு குடித்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு செல்ல மாட்டார். மேலும், சம்பவத்தன்று கே.பி. பார்க் குடியிருப்புக்கு 4 பேர் வந்து டான்ஸ் மாஸ்டர் ரமேஷ் எங்கே இருக்கிறார் என்று கேட்டுள்ளனர். ஆனால் ரமேஷ் கீழே விழுந்து இறந்த பிறகு அந்த 4 பேரும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. எனவே ரமேஷின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியிருக்கிறார். இதனால்,போலீசார் அந்த நான்கு பேர் யார்? எதற்கான அங்கு வந்தார்கள் என்பதை விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











