GOAT: கிட்ஸ்க்கு ரொம்ப பிடிச்ச தளபதி.. விசில் போடு பாடலுக்கு அசையும் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை

சென்னை: தமிழ் சினிமா உலகம் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா உலகத்திலும் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள விசயம் என்றால் அது நேற்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி கிட்ட்த்தட்ட 5000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆன கோட் படம் தொடர்பாகத்தான். தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்திற்கு தமிழ் நாடு தவிர, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இணையத்தில் தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை தி கோட் படத்தில் இடம் பெற்றுள்ள விசில் போடு பாடலுக்கு நன்கு அசையும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

goat whistle podu song vijay

விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இவரது சினிமா வாழ்க்கையில் 68வது படம். படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதைப்போல், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது.

goat whistle podu song vijay

படத்தினை சிறப்பாக இயக்கியது மட்டும் இல்லாமல், படத்தில் பல முன்னணி நடிகர்களின் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் காட்சிகளை வைத்து, அதற்கேற்ற திரைக்கதையை அமைத்தும் அனைவரது பாராட்டுகளையும் வெங்கட் பிரபு பெற்று வருகின்றார். படத்தினைப் பார்த்த பல ரசிகர்கள் தொடர்ந்து வெங்கட் பிரபுக்கு நன்றிகள் கூறி வருகின்றனர். குறிப்பாக நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகவுள்ளதாக கூறியுள்ள நிலையில், தளபதிக்கு ஃபேர்வெல் கொடுக்கும் விதமாக இப்படியான திரைக்கதையை அமைத்ததற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

goat whistle podu song vijay

கலவையான விமர்சனம்: கோட் படத்தில் இருந்து முதன் முதலில் வெளியிடப்பட்ட பாடல் என்றால் அது, விசில் போடு பாடல்தான். இந்தப் பாடலினை விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இது படக்குழுவினருக்கு அதிருப்தியைக் கொடுத்தது. ஆனால் நாளாக நாளாக பாடல் கேட்க நன்றாக இருப்பதாக ரசிகர்கள் இணையதளத்தில் பாடலைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். படக்குழு வெளியிட்டதும் ரசிகர்களை திருப்தி படுத்திய பாடல்கள் என்றால் அது சின்ன சின்ன கண்கள் பாடலும், மட்ட பாடலும்தான்.

goat whistle podu song vijay

விசில் போடு: இந்த இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற, ஸ்பார்க் பாடல் ரசிகர்களிடம் பெரும் அதிருப்தியைப் பெற்றது. இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது, பாடல் வரிகளோ இசையோ அல்ல, ஸ்பார் பாடலில் இடம் பெற்ற டீ-ஏஜிங் செய்யப்பட்ட விஜய்தான். இப்படியான நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ உலா வருகின்றது. அதில், விசில் போடு பாடலுக்கு தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை நன்கு அசைகின்றது.

goat whistle podu song vijay

வீடியோ: அந்த வீடியோவில், தாய் கூறுவது, தனது முதல் குழந்தை வயிற்றில் இருக்கும்போது ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு ஆடினான். இப்போது வயிற்றில் இருக்கும் குழந்தை விசில் போடு பாடலுக்கு நடனமாடுகின்றது எனக் கூறிவிட்டு, தனது மொபைலில் விசில் போடு பாடலை ஒலிக்கச் செய்கின்றார். அதன் பின்னர் மொபைலில் சவுண்ட் அதிகம் வைக்கின்றார்.

goat whistle podu song vijay

சில நொடிகளில் குழந்தை அழகாக அசைகின்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் இந்த வீடியோவைப் பார்த்த பலர், " என்னடா, முன்னாடியெல்லாம் ஆறு வயசுல தான் விஜய் FANS ஆயிட்டு வந்தானுங்க, இப்ப என்னடா அம்மா வயித்துக்குள்ள இருக்கும்போது அண்ணனுக்கு FAN ஆகிடுராணுங்க" என செல்லமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X