அட்லி, ஷாருக்கான் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை!

சென்னை : தொடர் வெற்றி படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் அட்லி இப்பொழுது ஹிந்தியில் ஷாருக் கானை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இதன் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்து பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.

இன்னும் ஓரிரு மாதத்தில் இதன் படப்பிடிப்பு துபாயில் தொடங்க உள்ள நிலையில் பிரபல பாலிவுட் இளம் நடிகை ஒருவர் இப்படத்தில் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கமர்ஷியல் கில்லி

கமர்ஷியல் கில்லி

இயக்குனர் அட்லி தனக்கென ஒரு ஸ்டைலை வைத்துக் கொண்டு தொடர்ந்து மெகா ஹிட்டுகளை கொடுத்து வருகிறார். இயக்குனர் ஷங்கரிடம் நண்பன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது விஜய்யுடன் மிக நெருக்கமான அட்லி விஜய்யின் மிகத் தீவிரமான ரசிகர் என்பது பலரும் அறிந்ததே. ராஜா ராணி என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அட்லிக்கு முதல் படமே வெற்றிப்படமாக அமைய அதைத் தொடர்ந்து விஜய்யை வைத்து அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இயக்கிய நான்கே திரைப்படத்தில் முன்னணி இயக்குனர் அந்தஸ்தை பெறுவது அவ்வளவு எளிதல்ல ஆனால் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் கோடிக்கணக்கில் வசூல் செய்து பல சாதனைகளை படைத்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய கமர்ஷியல் படங்களை இயக்குவதில் கில்லியான அட்லி முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய தெறி திரைப்படம் மாபெரும் வசூலை அள்ளியது. ஸ்டைலா கெத்தா விஜய்யை எந்தெந்த கோணங்களில் காண ஒரு ரசிகர் ஆசைப்படுவாரோ அந்த வகையில் ரசிகராகவும் இருந்து விஜய்யை பார்த்து பார்த்து படங்களில் காட்டி வெற்றிகளை குவித்து வருகிறார்.

விஜய் மூன்று வேடங்களில்

விஜய் மூன்று வேடங்களில்

காதல் சென்டிமென்ட் ஆக்ஷன் காமெடி என ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இவரது ஒவ்வொரு படங்களிலும் இடம் பெற்று வர தெறி வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து மெர்சல் என்ற படத்தை இயக்கி மெர்சலான வெற்றியை கொடுத்த அட்லி இந்த முறை விஜய்யை 3 வேடங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். முதல் முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த மெர்சல் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷல் படமாக அமைந்தது. டாக்டர், மேஜிசியன், விவசாயி என மூன்று வேடங்களில் விஜய் பிரமாதமாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களும் இப்படத்தை கொண்டாட தொடங்கினர். விஜய் அட்லி கூட்டணியில் உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்த இந்த கூட்டணி மூன்றாவது முறையாகவும் இணைந்தது. மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கி இருந்தார் அட்லி. பிகில் படத்தை முழுக்க முழுக்க பெண்களுக்காக இயக்கியிருந்தார். நம் நாட்டில் விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு என விளையாட்டில் முக்கியத்துவம் குறைந்த அளவே இருக்க பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி எடுத்திருந்தார். விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களை உணர்வுப்பூர்வமாக காட்டியிருந்த பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி மெகா ஹிட் வெற்றி பெற்றது. இதில் விஜய் ஒரு வேடத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராகவும், கால்பந்தாட்ட வீரராகவும் வர மற்றொரு வேடத்தில் ராயப்பன் என்ற கதாபாத்திரத்தில் கேங்ஸ்டர் டானாக வயதான தோற்றத்தில் வருகிறார்.

அட்லி ஷாருக்கான் கூட்டணி

அட்லி ஷாருக்கான் கூட்டணி

இவ்வாறு தமிழில் இயக்கிய நான்கு திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றிகளை பெற அடுத்து பாலிவுட் பக்கம் இவரது பார்வை திரும்ப எடுத்த உடனேயே மேலிடத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆம் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துவரும் ஷாருக் கானை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார். அட்லி ஷாருக்கான் இணையும் படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இருவரும் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார். முதற்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட பணிகளுக்காக மும்பையில் முகாமிட்டுள்ளார். இதில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதால் மிக வித்தியாசமான கதையாக இப்படம் உருவாகி வருகிறது. ஷாருக்கானும் அடிக்கடி கதையில் சில மாற்றங்களை செய்யும்படி தொடர்ந்து கூறி படத்தின் கதைக்கு மேலும் மெருகேற்றி வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தொடங்க உள்ள இதன் படப்பிடிப்பு முடிய சுமார் ஆறு மாதங்கள் ஆகும்.

சானியா மல்ஹோத்ரா

சானியா மல்ஹோத்ரா

எனவே முன்னரே டீசர் மற்றும் புரமோஷனுக்காக படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. நடிகை நயன்தாரா இதில் ஹீரோயினாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. எனவே மிக விரைவிலேயே நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் மற்றுமொரு கதாநாயகியாக தங்கல் பட நடிகை இணைந்துள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. ஆமிர் கான் நடிப்பில் உலக அளவில் பெரும் வசூல் சாதனை புரிந்த தங்கல் படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்த சானியா மல்ஹோத்ரா இப்போது அட்லி ஷாருக்கான் கூட்டணியில் இணைந்துள்ளது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X