For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  3 வயசுலயே பலாத்காரம் செய்யப்பட்டேன்.. படுக்கைக்கு போகலைன்னா பட வாய்ப்பு இல்லை.. தங்கல் நடிகை ஷாக்!

  |

  மும்பை: அமிர்கானின் தங்கல் பட நடிகை பாத்திமா சனா ஷேக், தான் 3 வயதிலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன் எனும் ஷாக்கிங்கான விஷயத்தை மனம் திறந்துள்ளார்.

  குழந்தை பருவத்தில் இருந்தே நடித்து வருகிறார் நடிகை பாத்திமா சனா ஷேக்.

  தங்கல் திரைப்படத்தில் கீதா போகட்டாக நடித்து ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களின் மனங்களையும் வென்றார்.

  வனிதா கிட்ட யாரு பருப்பும் வேகாது.. மறுபடியும் அசிங்கப்படுத்துறாங்களே.. கன்டன்டே இவங்கதானா?

  அவ்வை சண்முகி ரீமேக்

  அவ்வை சண்முகி ரீமேக்

  தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அவ்வை சண்முகி திரைப்படத்தை சாச்சி 420 என்ற டைட்டிலில் இந்தியில் ரீமேக் செய்து இயக்கி இருந்தார் கமல்ஹாசன். 1997ம் ஆண்டு வெளியான அந்த படத்தில் கமல் மற்றும் தபுவின் குழந்தையாக நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் பாத்திமா சனா ஷேக்.

  தங்கல் நாயகி

  தங்கல் நாயகி

  கடந்த 2016ம் ஆண்டு வெளியான தங்கல் படத்தில், பெரிய வயது கீதா போகட்டாக நடித்து கலக்கியவர் பாத்திமா சனா ஷேக். கடுமையான மல்யுத்த பயிற்சி எல்லாம் செய்து, அந்த படத்திற்கு உயிரை கொடுத்து நடித்த அவரது நடிப்பை ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டினார்கள். அமிர்கானின் அந்த படம் 2000 கோடி வசூலை எட்டியது குறிப்பிடத்தக்கது.

  மீண்டும் அமிர்கானுடன்

  மீண்டும் அமிர்கானுடன்

  தங்கல் படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அமிர்கானுடன் இணைந்து தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்தில் ராஜகுமாரியாக பாத்திமா நடித்து இருந்தார். அமிதாப் பச்சன், கத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான அந்த படம் பைரேட்ஸ் ஆஃபி தி கரீபியன் படத்தின் காப்பி என கிளம்பிய விமர்சனத்தால் படு தோல்வியை சந்தித்தது.

  3 வயசுலயே

  3 வயசுலயே

  பிறந்து நடக்க ஆரம்பித்த உடனே பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடப்பது இந்த சமூகத்தில் மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டது. தானும் அது போலவே மூன்று வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் வெடித்துக் கூறி, ஒட்டுமொத்த பாலிவுட்டையே ஷாக்காக்கி உள்ளார் பாத்திமா.

  படுக்கைக்கு போனால் தான்

  படுக்கைக்கு போனால் தான்

  மேலும், தனக்கும் சினிமாவில் காஸ்டிங் கோச் ஏகப்பட்ட முறை நடைபெற்றதாகவும், படுக்கைக்கு சென்று பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொள்ளாததால் ஏகப்பட்ட பட வாய்ப்புகளை இழந்தேன் என்றும். தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில், திடீரென அந்த காரணத்திற்காக வேறு ஒரு ஹீரோயினை மாற்றி விடுவார்கள் என்றும் கூறி பாலிவுட்டின் முகத்திரையை கிழித்து எறிந்தார்.

  லூடோ

  லூடோ

  லாக்டவுனில் இந்தியளவில் டிரெண்டான லூடோ விளையாட்டை டைட்டிலாக வைத்து உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் பாத்திமா சனா ஷேக். மேலும், சூரஜ் பே மங்கள் பரி என்கிற படத்திலும் நாயகியாக நடித்து வரும் இவர், பெண்கள் மீது தொடுக்கப்படும் இது போன்ற அநீதிகள் சமூகத்தில் இருந்து களை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

  English summary
  Dangal actress Fatima Sana Shaik had been acting in movies since a young age. The actress has now opened up on her horrifying sexual abuse experience.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X