twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகுபலியை துரத்து துரத்துன்னு துரத்தும் தங்கல்: ரூ. 1,500 கிளப்பில் சேர்ந்தது

    By Siva
    |

    மும்பை: பாகுபலி 2 படத்தை அடுத்து ஆமீர் கானின் தங்கல் படம் உலக அளவில் ரூ. 1,500 கோடி வசூல் செய்துள்ளது.

    ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற சாதனையை படைத்தது.

    இதையடுத்து ஆமீர் கானின் தங்கல் படமும் ரூ. 1000 கோடி வசூல் செய்தது.

    ரூ. 1,500 கோடி

    ரூ. 1,500 கோடி

    ரூ. 1000 கோடியை அடுத்து ரூ.1, 500 கோடி வசூல் செய்தது பாகுபலி 2. ரூ. 1,500 கோடி கிளப்பையும் பிரபாஸே துவங்கி வைத்துள்ளார். இதை பார்த்து காதில் புகை வந்தாலும் சிரித்து சமாளித்தது பாலிவுட்.

    தங்கல்

    தங்கல்

    பாகுபலி 2 படத்தை அடுத்து ஆமீர் கானின் தங்கல் படமும் உலக அளவில் ரூ. 1,500 கோடி வசூல் செய்துள்ளது. தங்கல் சீன மொழியில் இந்த மாத துவக்கத்தில் வெளியிடப்பட்டது.

    சீனர்கள்

    சீனர்கள்

    தங்கல் படம் ஓடும் தியேட்டர்களுக்கு சீனர்கள் தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர். தங்கல் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிவதால் வசூல் கொட்டோ கொட்டுன்னு கொட்டுகிறது.

    சீனா

    சீனா

    தங்கல் சீனாவில் மட்டும் ரூ. 730 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சீனாவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் அல்லாத படம் தங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தங்கல் பாகுபலி 2 படத்தை முந்திக் கொண்டு புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

    English summary
    After Baahubali 2, Aamir Khan starrer Dangal has collected Rs. 1,500 crore world wide. Dangal's China release has helped the movie to achieve this feat.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X