பாகுபலி.... இதோ வந்துக்கிட்டே இருக்கேன்.. வசூலில் துரத்தும் தங்கல்!
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் வெளியான 'தங்கல்' படம் சுமார் ரூ.800 கோடியை வசூலித்திருந்த நிலையில், சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்டது.
சீனா மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் படமாக மாறியுள்ள இப்படம், வசூலில் அடுத்த மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனை படைத்து வருகிறது.

சீனாவில் வெளியாகிய 2 வாரத்தில், ரூ.550 கோடியை வசூல் செய்துள்ளது தங்கல், இதைச் சேர்த்தால் படத்தின் மொத்த வசூல் ரூ.1287.58 கோடியாகும்,
பாகுபலி இப்போது 1500 கோடியைக் குவித்துள்ளது. இன்னும் ஒரு வாரம் ஓடினால் இந்த வசூலை தங்கல் படம் நெருங்கிவிடும் என்கிறார்கள்.
இந்தப் படங்களின் வசூல் சாதனைகளை முறியடிக்கும் அடுத்த இந்தியப் படம் என்னவாக இருக்கும் என்பதை அறிய உண்மையிலேயே இந்திய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications