பாகுபலி 2 படத்தை அடுத்து ரூ. 1000 கோடி வசூல் செய்த தங்கல்: கான்கள் நிம்மதி
மும்பை: பாகுபலி 2 படத்தை அடுத்து ஆமீர் கானின் தங்கல் படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்துள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் பாகுபலி 2.
இந்நிலையில் அந்த சாதனையை ஆமீர் கானின் தங்கல் படமும் பகிர்ந்துள்ளது.

சீனா
தங்கல் படம் சீனாவில் கடந்த 5ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. படம் ரிலீஸான ஐந்தே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.

தங்கல்
முன்னதாக தங்கல் படம் உலக அளவில் ரூ. 716 கோடி வசூலித்திருந்தது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ. 511 கோடி வசூல் செய்திருந்தது. இந்நிலையில் தைவானில் வசூலான ரூ.10 கோடியை சேர்த்து ரூ. 726 கோடி ஆனது.

ரூ. 1000 கோடி
தங்கல் படம் சீனாவில் ரிலீஸான 9 நாட்களில் ரூ. 300 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தங்கலின் மொத்த வசூல் ரூ. 1026 கோடியாகியுள்ளது. ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்தி படம் தங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

கான்கள்
ரூ. 1000 கோடி கிளப்பை பிரபாஸ் துவங்கி வைத்த கடுப்பில் இருந்த கான்களுக்கு தங்கல் படைத்துள்ள சாதனை நிம்மதி அளித்துள்ளது. சீனாவில் தங்கல் ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டம் நிரம்பி வழிகிறது.


Click it and Unblock the Notifications











