ஐந்தாறு இடத்தில் ஆழமான வெட்டு.. பதற வைக்கும் மதுவின் கை காயம்.. ஷாக் போட்டோ வெளியிட்ட டேனி!

சென்னை: நடிகை மதுமிதா கையை அறுத்துக்கொண்டதால் ஏற்பட்ட காயம், எந்த அளவுக்கு ஆழமானது என்பதை, போட்டோ வெளியிட்டு காட்டியுள்ளார் நடிகர் டேனியல் ஆன்னி போப்.

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பல சர்ச்சைகள் நடந்து கொண்டே இருந்தாலும், மதுமிதா கையை அறுத்துக்கொண்ட விவகாரம் தான் பயங்கர பரபரப்பாக பேசப்பட்டது. தன்னை தானே துன்புறுத்திக் கொண்டதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார் மது.

அவர் வீட்டைவிட்டு வெளியே சென்ற பிறகு, தங்களை மது மிரட்டுவதாக விஜய் டிவி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது பொய் புகார் என மறுப்பு தெரிவித்த மது, தன்னை செய்தியாளர்களை சந்திக்க விடாமல் விஜய் டிவி நிர்வாகம் தடுப்பதாக போலீசில் எதிர் புகார் கொடுத்தார் அவர்.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

இதையடுத்து நேற்று தான் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார் மதுமிதா. பிக் பாஸ் வீட்டில் தனக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அவர் விரிவாக பேசினார். அப்போது அவர் தெரிவித்த பல விசயங்கள் பரபரப்பை ஏற்படுத்தும் விதத்தில் அதிர்ச்சிகரமாக இருந்தது.

டேனியல்

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் மது தனது கையை அறுத்துக்கொண்டதால் ஏற்பட்ட காயத்தின் புகைப்படத்தை, நடிகரும், கடந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளருமான டேனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "நான் ஏன் மதுவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன் என்பதை இந்த போட்டோவை ஜூம் செய்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்" என அதில் டேனி குறிப்பிட்டுள்ளார்.

ஆழமான காயம்

ஆழமான காயம்

இடது முழங்கையில் உள்பக்கத்தில் ஐந்தாறு இடங்களில் ஆழமாக வெட்டு பட்டுள்ளது போட்டோவில் தெரிகிறது. இந்த காயத்தை பார்க்கும் போது நிச்சயம் நிறைய ரத்தம் வீணாகியிருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்து மதுமிதாவின் நிலையை நினைத்து ஆதங்கப்பட்டுள்ளனர் சில ரசிகர்கள்.

சந்தேகம் தீர்ந்தது

சந்தேகம் தீர்ந்தது

அதே சமயம் துணிச்சலாக இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள டேனியையும் அவர்கள் பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் டிஆர்பிக்காக மது கையை அறுத்துக் கொண்டதாக நாடகம் ஆடினாரோ என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. இதுவரை அது தொடர்பான காட்சிகள் எதையும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை.

கமலின் அறிவுரை

கமலின் அறிவுரை

எனவே, நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்ற கேள்வி நீடித்து வந்தது. ஆனால் மதுவின் கையில் உள்ள காயத்தைப் பார்க்கும் போது, சண்டையின் போது மது எவ்வளவு கோபத்தில் இருந்திருப்பார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கமல் கூறியது போல் மது அஹிம்சை வழியில் போராடி இருந்திருக்கலாம், இப்படி பாவம் தன்னைக் காயப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X