twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஞானக்கிறுக்கன்' ஆனார் டேணியல் பாலாஜி...!

    By Sudha
    |

    சென்னை: நிஜக் கதைகளைப் படமாக்குவது தமிழ் சினிமாவில் புதிதில்ல. அந்த அடிப்படையில், தற்போது இன்னும் ஒரு நிஜக் கதை படமாகிறது. படத்திற்குப் பெயர் ஞானக்கிறுக்கன்.

    30 வருடத்திற்கு முன்பு நடந்த நிஜக் கதையை தழுவி இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளனராம்.

    டேணியல் பாலாஜி, செந்தி ஒரு ஜோடியாகவும், ஜெகா, அர்ச்சனா கவி, சுஷ்மிதா இன்னொரு கூட்டணியாகவும் இதில் நடிப்பைக் கொட்டியுள்ளனராம்.

    இளையதேவன் இயக்கத்தில்

    இளையதேவன் இயக்கத்தில்

    இளையதேவன் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தைக் கவனிக்கிறார். அவரே இயக்கவும் செய்துள்ளார். தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

    கணேசன் என்கிற டேணியல் பாலாஜி

    கணேசன் என்கிற டேணியல் பாலாஜி

    நல்ல நடிகராக அடையாளம் காணப்பட்டவரான டேணியல் பாலாஜி இதில் கணேசன் என்ற வேடத்தில் வருகிறார். இவர்தான் படத்தின் ஞானக்கிறுக்கன் கதாபாத்திரமாம்.

    மனைவி செந்தி

    மனைவி செந்தி

    இவரது மனைவியாக செந்தி நடித்துள்ளார். மேலும் ஜெகா என்ற புதுமுகம் நாயகனாகியுள்ளார். அர்ச்சனா கவி, சுஷ்மிதாவும் படத்தில் உள்ளனர்.

    தம்பி ராமையாவும்

    தம்பி ராமையாவும்

    தம்பி ராமையாவும் முக்கிய பாத்திரத்தில் வருகிறாராம்.

    தாஜ்நூர் இசையி்ல்

    தாஜ்நூர் இசையி்ல்

    படத்திற்கு இசையமைத்திருப்பவர் தாஜ்நூர். பாடல்களை அறிவுமதி, நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி, மோகன்ராஜன் ஆகியோர் புனைந்துள்ளனர்.

    கை தந்து கரை சேர்க்க துணையும் இல்லை...

    கை தந்து கரை சேர்க்க துணையும் இல்லை...

    இந்தப் படத்திற்காக ஒரு பாடலை சமீபத்தில் திருவாரூர் மாவட்டம் எனாம்கிளியூர் என்ற கிராமத்தில் வைத்து நடத்தினர். கண்ணீரை எடை போட எவருமில்லை - கை தந்து கரை சேர்க்க துணையும் இல்லை என்ற அந்தப் பாடல் காட்சியில், டேணியல் பாலாஜி, செந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடித்தனர்.

    கண்ணீர் விட்டு அழுத மக்கள்

    கண்ணீர் விட்டு அழுத மக்கள்

    இந்தப் பாடலைப் படமாக்கியபோது கிராம மக்கள் பலர் நிஜமாகவே அழுது விட்டனராம். தங்களது கிராமத்துக் கதை என்பதால் அவர்கள் நெகிழ்ச்சியுடன் படப்பிடிப்பையும் வேடிக்கை பார்த்தனராம்.

    கற்பனை கிடையாது...

    கற்பனை கிடையாது...

    படம் குறித்து இயக்குநர் இளையதேவன் கூறுகையில், ஒரு உண்மை சம்பவத்தை கருவாக எடுத்து கற்பனை கலக்காமல் படமாக்கி முடித்திருக்கிறேன் என்றார்.

    English summary
    Daniel Balaji and Senthi have acted in a movie Gnanakirukkan, based on a real story. Ilayadevan has directed the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X