அதிர்ச்சி.. 48 வயசு தான் ஆகுது.. பொல்லாதவன் வில்லன் டேனியல் பாலாஜி மரணம்.. இதுதான் காரணமா?
சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காக்க காக்க படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த டேனியல் பாலாஜி கெளதம் மேனன் அடுத்து இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார்.
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்திலும் மெயின் வில்லன் டேனியல் பாலாஜி தான். தளபதி விஜய் நடிப்பில் வெளியான பைரவா மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்த டேனியல் பாலாஜி வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் ராஜனாக நடித்த அமீரின் சகோதரனாக நடித்திருப்பார்.

கடைசியாக கடந்த ஆண்டு வெளியான அரியவன் படத்தில் நடித்த டேனியல் பாலாஜி அதன் பின்னர் எந்தவொரு படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென அவர் காலமானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
டேனியல் பாலாஜி மரணம்: தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக அதி விரைவிலேயே உயிரிழந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னதாக லொள்ளு சபா சேஷு 60 வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். இந்நிலையில், அடுத்த பேரிழப்பாக டேனியல் பாலாஜி வெறும் 48 வயதில் உயிரிழந்தது ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதுதான் காரணமா?: வில்லன் நடிகரான டேனியல் பாலாஜிக்கு புகைப்பிடிக்கும் பழக்கமும் மது அருந்தும் பழக்கமும் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. அதை விட்டு விட்டு ஆன்மிகத்தில் அதிக நாட்டம் செலுத்தி வந்த டேனியல் பாலாஜி சமீப காலமாக பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், உடல்நலக்குறைவும் ஏற்பட்டது என்று கூறுகின்றனர்.
மாரடைப்பு: 48 வயதெல்லாம் மாரடைப்பு ஏற்பட்டு மரணிக்கக் கூடிய வயதா என ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சினிமா நடிகர்கள் தங்கள் உடல் நலத்தை அதிகம் பேணி பாதுகாக்காமல் இருப்பது தான் இப்படி இளம் வயதில் மரணம் நிகழ காரணம் என்று கூறுகின்றனர்.
கொரோனா பாதிப்பு: கடந்த 2021ம் ஆண்டு ஒட்டுமொத்த உலகையும் பல பிரபலங்களையும் வாட்டி வதைத்த கொரோனா தொற்றுக்கு டேனியல் பாலாஜியும் ஆளாகியிருந்தார். கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த விவேக் உள்ளிட்ட பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததை போல டேனியல் பாலாஜியும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மறைவுக்கு பல காரணங்களை சினிமா பிரபலங்கள் அடுக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











