கண் தானம் செய்த டேனியல் பாலாஜி.. கண்ணாடி அணிந்த நிலையில் பெட்டியில் அவர் உடல்.. கலங்கிய அவுட்டு!

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக நேற்று இரவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது உயிர் பிரிந்து விட்டது. ஏற்கனவே தான் இறந்தாலும், தனது கண்கள் மூலம் இந்த உலகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக கண் தானம் செய்திருந்தார் டேனியல் பாலாஜி.

மருத்துவர்கள் வந்து அதற்கான வேலைகளை செய்து அவரது கண்களை எடுத்துச் சென்றனர். கண்கள் இல்லாத நிலையில், அந்த கண் பகுதியை காட்டன் துணியால் கட்டி வைத்துள்ளனர். மேலும், மூக்கு கண்ணாடி ஒன்றையும் அணிவித்திருக்கின்றனர்.

Daniel Balaji eye surface covered with cotton after eye donation process done

கண்ணாடி பெட்டிக்குள் டேனியல் பாலாஜி உயிரற்ற உடலாக இருப்பதை பார்த்த அவரது குடும்பத்தினரும் சினிமா பிரபலங்களும் சோகத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

கண் தானம்: மரணித்த பிறகு இந்த கண்கள் மற்றவர்களுக்கு பார்வை கொடுக்கிறது என்றால் அதை ஏன் வீணாக மண்ணுக்குப் போக வைக்க வேண்டும் என நினைத்து கண் தானம் செய்திருந்த நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு மறைந்த நிலையில், அவரது கண்கள் தானத்திற்காக மருத்துவர்கள் கொண்டு சென்று விட்டனர். கண்கள் கட்டப்பட்ட நிலையில், கண்ணாடி ஒன்றை அணிந்துக் கொண்டு கண்ணாடி பெட்டிக்குள் அவரது உடல் உறங்கிக் கொண்டிருக்கிறது.

Daniel Balaji eye surface covered with cotton after eye donation process done

கலங்கிய அவுட்டு: பொல்லாதவன் படத்தில் அவுட்டு எனும் கதாபாத்திரத்தில் நடிகர் பவன் நடித்திருப்பார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்திலும் அவர் நடித்திருப்பார். பல வருடங்கள் நெருங்கிய நண்பராக பழகி வந்த டேனியல் பாலாஜியின் மறைவு அறிந்து அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய அவுட்டு சில நிமிடங்கள் டேனியல் பாலாஜியின் உடல் அருகே மெளனமாக இருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய காட்சிகள் ரசிகர்களை கலங்கடித்துள்ளன.

பிரபலங்கள் இரங்கல்: வெற்றிமாறன், கெளதம் மேனன், அமீர் உள்ளிட்ட இயக்குநர்கள் முன்னதாக வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். நடிகர் தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X