எனக்கு முன்னாடியே போயிட்டியே என் தங்கமே.. டேனியல் பாலாஜி உடலை பார்த்து கதறியழுத அம்மா.. பெருந்துயரம்

சென்னை: ஆவடியில் அம்மாவின் ஆசைக்காகத்தான் டேனியல் பாலாஜி கோயிலையே கட்டினார். தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது தாய்க்கு துணையாக இருந்து வந்த டேனியல் பாலாஜி தற்போது அம்மாவை விட்டு விட்டு அதற்குள் பிரிந்து சென்றது அவரது தாயை மீள முடியாத துயரில் ஆழ்த்தியுள்ளது.

ராதிகா சரத்குமார் நடித்த சித்தி சீரியலில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகராக அறிமுகமான டேனியல் பாலாஜி ஸ்ரீகாந்த், சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Daniel Balaji mom cried a lot at her son funeral shocks everyone

கெளதம் மேனன் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்கள் அவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வில்லன் நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்தார் அவரது மறைவு செய்தி ஒட்டுமொத்த சினிமா உலகையே ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் இரங்கல்: தளபதி விஜய்யின் பைரவா படத்தில் டேனியல் பாலாஜி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தனர். இந்நிலையில், டேனியல் பாலாஜி மறைவை அறிந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், மிகச்சிறந்த நடிகர் இவ்வளவு சீக்கிரம் காலமாகி விட்டாரே என இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இரங்கல்: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான வடசென்னை படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். ஆண்ட்ரியாவை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷும் அந்த படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருந்த டேனியல் பாலாஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகனை பார்த்து கதறிய அம்மா: டேனியல் பாலாஜி தனது அம்மாவுக்காகத்தான் ஆவடியில் கோயில் கட்டினார். கடைசி வரை திருமணமும் செய்துக் கொள்ளாமல் தனது அம்மாவை கவனித்து வந்தார். இந்நிலையில், மகன் உயிரிழந்து கிடப்பதை பார்த்து பதறிப் போய் அவரது அம்மா அழுது புலம்பும் காட்சிகள் சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்துகிறது.

தங்கமே என்ன விட்டுட்டு போயிட்டியே: நடக்கவே முடியாமல் தள்ளாத வயதில் மகனை பார்க்க காரில் இருந்து இறங்கி வந்த அவரது அம்மா டேனியல் பாலாஜியின் உடலை பார்த்து கதறி அழுத காட்சிகள் பதை பதைக்க வைக்கின்றன. எனக்கு முன்னாடி போயிட்டியே தங்கமே என்றும் அம்மாவை தவிக்க விட்டுட்டு போயிட்டியே என்றும் அவர் அழுது புலம்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X