டேனியல் பாலாஜி கேட்காமலே உதவி செய்த கேஜிஎஃப் ஹீரோ.. அப்படி என்ன உதவி செஞ்சாரு தெரியுமா?

சென்னை: பிரபல நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழில் அறிமுகமான டேனியல் பாலாஜி தனது அசாத்தியமான நடிப்புத் திறமையால் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

கேஜிஎஃப் ஹீரோ யஷ் உடன் இணைந்து டேனியல் பாலாஜி நடித்த நிலையில், அவருக்கு தக்க சமயத்தில் ஒரு பெரிய உதவியை யஷ் செய்தார் என த்ரோபேக் பேட்டி ஒன்றில் டேனியல் பாலாஜி பேசியிருப்பது தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Daniel Balaji once revealed how KGF hero Yash helps him to built his Temple

விஜய் ரசிகர்கள், யஷ் ரசிகர்கள், கமல்ஹாசன் ரசிகர்கள் என பலரும் டேனியல் பாலாஜி மறைவை விடிந்ததும் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பல சினிமா பிரபலங்களும் தங்கள் இரங்கலை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

ஆவடியில் கோயில்: சிறு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் எல்லாம் நாட்டமில்லை என்றும் அதற்கான வயது வந்த பின்னர் தான் கடவுளை வணங்க ஆரம்பித்தேன் என ஆவடியில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய நிலையில், அளித்த பேட்டியில் டேனியல் பாலாஜி பல விஷயங்களை கூறினார். தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அங்காள பரமேஸ்வரி கோயிலை கட்டிய டேனியல் பாலாஜிக்கு கேஜிஎஃப் ஹீரோ யஷ் உதவி செய்ததையும் சொல்லியிருந்தார்.

சாவடி அடிப்பாரு: பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய டேனியல் பாலாஜி பைரவா படத்தின் சூட்டிங்கின் போது சார் என தள்ளி வைத்தே பேசினார் தளபதி விஜய். பிகில் படத்தின் சூட்டிங்கின் போது வாங்க நண்பா என என்னை நண்பனாக்கி விட்டார் என்றார். சினிமாவுல சாவடி அடிப்பாரு டேனியல் பாலாஜின்னு தானே இவர உங்க எல்லாருக்கும் தெரியும் ஆவடியில இவர் அம்மன் கோயிலே கட்டியிருக்காரு என பேசிய வீடியோக்களை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

கேஜிஎஃப் ஹீரோ செய்த உதவி: ஆவடியில் கோயில் கட்ட நடிகர் டேனியல் பாலாஜிக்கு கேஜிஎஃப் படத்தின் நாயகன் யஷ் சில லட்சங்கள் பணமாக உதவி செய்ததை த்ரோபேக் பேட்டியில் கூறியுள்ளார். கேஜிஎஃப் படத்தில் நடிக்க கூப்பிடும் போது, கோயில் கட்டிக் கொண்டிருக்கிறேன் வர முடியுமா? என தெரியவில்லை என டேனியல் பாலாஜியும் சொல்லியும் உடனடியாக யஷ் பணத்தை போட்டுவிட்டிருக்கிறார். நான் டேட்டே தரேன்னு சொல்லலையே என போன் செய்து கேட்டதற்கு இது நீங்க கட்டுற கோயிலுக்கு என்று சொன்னதாக அந்த பேட்டியில் யஷ் குறித்து டேனியல் பாலாஜி பேசியிருந்தார்.

Daniel Balaji once revealed how KGF hero Yash helps him to built his Temple

யஷ் படத்தில்: 2011ம் ஆண்டு பிரதீப் ராஜ் இயக்கத்தில் கன்னடத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான 'கிராதகா' படத்தில் அவருடன் இணைந்து டேனியல் பாலாஜி நடித்திருப்பார். அந்த ஒரு படத்திலேயே யஷ்ஷுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்ட நிலையில், கேஜிஎஃப் படத்திலும் இவரை நடிக்க வைக்க அழைத்திருக்கிறார் யஷ். ஆனால், டேனியல் பாலாஜியால் கேஜிஎஃப் படத்தில் நடிக்க முடியவில்லை என்றாலும், அவர் கட்டிய கோயிலுக்கு நன்கொடை வழங்கியிருக்கிறார் யஷ்.

கடவுளிடம் ஃபிரெண்ட்ஷிப்: கடவுளிடம் பய பக்தியாக இருக்க வேண்டியதில்லை என்றும் நம்முடைய நண்பனை போல டீல் பண்ணாலே போதும். நானும் அப்படித்தான் சாமி கும்பிடுவேன். இதுவரை எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என கேட்டதே இல்லை. மனசு கஷ்டமாக இருந்தால் வந்து புலம்புவேன். ஹேப்பியா இருந்தா வந்து தேங்க்ஸ் சொல்லிட்டுப் போவேன் என பேசிய தங்கமான மனசுக்கு சொந்தக்காரரான டேனியல் பாலாஜி கண் தானம் செய்திருப்பதும் ரசிகர்களை நெகிழ செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X