25 வயசுலயே தெரிஞ்சுடுச்சு எனக்கு கல்யாணம் செட் ஆகாதுன்னு.. டேனியல் பாலாஜி உருக்கமாக சொன்ன விஷயம்!
சென்னை: மறைந்த நடிகர் சித்தியின் மகன் தான் நடிகர் டேனியல் பாலாஜி. நடிகர் முரளியை போலவே டேனியல் பாலாஜியும் இளம் வயதில் மரணிப்பார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சினிமாவில் சாவடி அடிப்பாரு ஆனால், நிஜத்துல ஆவடியில் கோயில் கட்டியிருக்காரு நம்ம டேனியல் பாலாஜி என பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதும் தான் டேனியல் பாலாஜி ஆன்மிகத்தில் எவ்வளவு நாட்டம் கொண்டவர் என்றும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கோயில் கட்டிய விஷயமும் ரசிகர்களுக்கு தெரிய வந்தது.
டேனியல் பாலாஜிக்கு எப்படியாவது ஒரு திருமணத்தை செய்து விட வேண்டும் என அவரது அம்மா செய்யாத முயற்சிகளே இல்லை. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் தனக்கு திருமணம் கை கூடாது என்கிற விரக்தியில் அந்த எண்ணத்தையே கை விட்டு விட்டதாகவும் டேனியல் பாலாஜி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் டேனியல் பாலாஜி: சித்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. அடுத்து அலைகள் சீரியலிலும் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த், சினேகா நடித்து வெளியான ஏப்ரல் மாதத்தில் படம் தான் சினிமாவில் இவரை அறிமுகப்படுத்தியது. காதல் கொண்டேன், காக்கா காக்க படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்த டேனியல் பாலாஜி தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பிசியாகி விட்டார்.
வேட்டையாடு விளையாடு: கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் சுகுமாரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் பாலாஜி இப்போது நினைத்து பார்த்தாலும் அந்த கொடூரமான காட்சிகள் கண் முன்னே வந்து போகும். இந்த படம் தான் வில்லனாக அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. வில்லனுக்கு சூப்பரான பாடலாக "நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே" பாடலை கெளதம் மேனன் வைத்திருப்பார்.
பொல்லாதவன்: வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு 2007ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான பொல்லாதவன் படத்தில் ரவி எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார். கிஷோரின் தம்பியாக பொல்லாதவன் படத்தில் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் அண்ணனை தூக்கி சாப்பிட்டு விட்டு கேங்ஸ்டராக மாறும் இடத்தில் எல்லாம் வேறலெவல் நடிப்பு. அதே போல, கிளைமேக்ஸ் காட்சியில் தனுஷுடன் மோதும் சண்டைக் காட்சிகளில் வெறித்தனம் காட்டி நடித்திருப்பார்.
திருமணமே செய்யல: தனக்கு பல இடங்களில் அம்மா பெண் பார்த்தாங்க, ஆனால், என் ஜாதகம் எதுக்குமே செட் ஆகல. ஜாதகம் செட் ஆனால், அந்த பொண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆகி நடந்து விடும். 25 வயசுலயே புரிஞ்சிக்கிட்டேன். நமக்கு இந்த கல்யாணம் எல்லாம் வேலைக்கு ஆகாது என தான் ஏன் திருமணமே செய்துக் கொள்ளவில்லை என்பதற்கு த்ரோபேக் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் டேனியல் பாலாஜி. இளம் வயதிலேயே தனது உயிர் பிரிந்து விடும் என அறிந்தே திருமணம் செய்துக் கொள்ளாமல் விட்டு விட்டாரா டேனியல் பாலாஜி என்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுது வருகின்றனர்.
பிரபலங்கள் இரங்கல்: கெளதம் மேனன், வெற்றிமாறன், விஜய், யஷ், தனுஷ் என தமிழ் சினிமாவில் டேனியல் பாலாஜி பலருடன் நல்ல நட்பில் இருந்து வந்தார். இந்நிலையில், அவரது மறைவு செய்தியை அறிந்த பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #DanielBalaji ஹாஷ்டேக்கை பதிவிட்டு ரசிகர்கள் அவரது பட காட்சிகளையும் புகைப்படங்களையும் ஷேர் செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











