அய்யோ கடவுளே..கடைசி வரை நிறைவேறாத டேனியல் பாலாஜியின் ஆசை!

சென்னை: வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் படத்தில் வில்லனாக மிரட்டிய டேனியல் பாலாஜி நேற்று உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குணசித்திர கதாபாத்திரம், வில்லன் என நடிகராக ஜெயித்த டேனியல் பாலாஜி, எதற்காக ஆசைப்பட்டு சினிமாவிற்குள் வந்தாரோ அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது தான வேதனை.

நடிகர் டேனியல் பாலாஜி 1975ம் ஆண்டு பிறந்தார். இவர் மறைந்த நடிகர் முரளியின் தம்பி ஆவார். அதாவது, முரளியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு பிறந்தவர் முரளி. இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் தான் டேனியல் பாலாஜி. தன்னுடைய அண்ணன் முரளி தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த போதும் அவரது பெயரை டேனியல் பாலாஜி எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் தனது உழைப்பால் உயர்ந்தார்.

Daniel Balaji s wish was not fulfilled until the end

நடிகர் டேனியல் பாலாஜி: சினிமாவில் இருந்த ஆர்வத்தால், சென்னை தரமணியில் உள்ள திரைப்பட நிறுவனத்தில் திரைப்படத் தயாரிப்பு படிப்பினை படித்தார். இதைத்தொடர்ந்த சினிமா வாய்ப்பை தேடி அலைந்த இவருக்கு கமல்ஹாசனின் மருதநாயகம் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மருதநாயகம் படம் பாதியில் நின்று போனதால், சின்னத்திரை பக்கம் வந்த இவர், ராதிகா சரத்குமார் இயக்கிய சித்தி சீரியலில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்பு தேடிவந்ததால் தொடர்ந்து பாடங்களில் நடித்து வந்தார்.

யாருடா இவன்: தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும், நடிப்புக்கு தீணிப்போட்ட படம் வேட்டையாடு விளையாடு தான் அந்த படத்தில் யாருடா இவன் என அனைவரையும் உற்றுநோக்க வைத்தார். இந்த படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த இவருக்கு, தனித்துவமான பல திறமையும் உள்ளதாம். அது தான் மேக்கப்போடுவது, வேட்டையாடு விளையாடு படத்தில் பிணத்தை காட்டும் காட்சிக்காக அமெரிக்காவில் பல டாலர்கள் கேட்டபோது, நான் போடுகிறேன் என்று தானாக முன் வந்து கௌதம் மேனனுக்கு உதவி செய்துள்ளார்.

மாரடைப்பு: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வந்த இவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். திருவான்மியூரில் தனது வீட்டில் இருந்த போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். டேனியல் பாலாஜி தனது கண்களை தானமாக கொடுத்து இருப்பதால், அதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கண் தானம்: டேனியல் பாலாஜியின் மறைவு செய்தியை கேள்வி பட்ட இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் கௌதம் மேனன் பதறி அடித்துக்கொண்டு இரவோடு இரவாக மருத்துவமனைக்கு வந்து சோகமே உருவாக அமர்ந்து இருந்தனர். அவர் கண்களை தானம் செய்து இருப்பதால், அறுவை சிகிச்சை முடிந்ததும், டேனியலின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இதையடுத்து அவரின் பூத உடல், திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

நிறைவேறாத ஆசை: டேனியல் பாலாஜி சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தாலும், அவர் சினிமாவிற்கு வந்ததே இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தானாம். இதனால் தான், தரமணி திரைப்பட கல்லூரியில் சேர்ந்து படித்ததாகவும், இயக்குனராக ஒரு படத்தை இயக்க முயற்சி செய்து அது நடக்காமல் போனதாக சொல்லப்படுகிறது. கடைசி வரை அவரின் ஆசை நிறைவேறவே இல்லை என அவரது உறவினர்கள் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X