twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவ்வளவுதாங்க... இனும இந்த பக்கம் வரவே மாட்டேன்... அடம் பிடிக்கும் 'ஜேம்ஸ்பாண்ட்' டேனியல் கிரேக்

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரேக், ஜேம்ஸ்பாண்ட் படம் பற்றி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    பாண்ட் பட வரிசைகளில் அடுத்ததாக வர இருப்பது, நோ டைம் டு டை. டேனியல் கிரேக், ரால்ஃப் பியன்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    தொடர்ந்து நான்கு பாண்ட் படங்களில் நடித்த டேனியல் கிரேக், இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்றார், முதலில்.

    முதல் கறுப்பின ஹீரோ

    முதல் கறுப்பின ஹீரோ

    இதனால், இட்ரிஸ் எல்பா என்ற நடிகர், பாண்ட் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பாண்ட் கேரக்டரில் நடிக்கும் முதல் கறுப்பின ஹீரோ அவர்தான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுதான் என் கடைசி பாண்ட் படம் என நடிக்கச் சம்மதித்தார் கிரேக். படத்தை ஸ்லம்டாக் மில்லினர் இயக்குனர் டேனி பாய்ல் இயக்குவதாக இருந்தது.

    கேரி ஜோஜி புகுனகா

    கேரி ஜோஜி புகுனகா

    கருத்துவேறுபாடு காரணமாக அவர் விலகினார். பின்னர் கேரி ஜோஜி புகுனகாவை இயக்குனராக்கியது தயாரிப்புத் தரப்பு. இவர், சின் நோம்ப்ரே, ஜேன் ஐரே, பீட்ஸ் ஆப் நோ நேஷன் ஆகிய ஹாலிவுட் படங்களை இயக்கியவர். இந்த பாண்ட் படம், ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. டேனியல் கிரேக் நடிக்கவில்லை என்பதால் அடுத்து பாண்ட் கேரக்டரில் ஹீரோயின் ஒருவர் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வந்தன.

    அடுத்த பாண்ட்

    அடுத்த பாண்ட்

    'கேப்டன் அமெரிக்கா' படத்தில் நடித்த லஷனா லின்ச் தான் அடுத்த பாண்ட் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பாண்ட் படங்களின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பார்பரா புரோக்கோலி இதை மறுத்தார். அடுத்த பாண்ட், ஆணாகத்தான் இருப்பார். பெண்ணாக இருக்க மாட்டார் என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

    டேனியல் கிரேக்

    டேனியல் கிரேக்

    இந்நிலையில், இதுதான் என் கடைசி பாண்ட் படம் என மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார் டேனியல் கிரேக். அவர் கூறும்போது, இனி பாண்ட் படத்தில் நடிக்க மாட்டேன், அது முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். இவர், கேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்திருந்தார்.

    English summary
    British actor Daniel Craig has confirmed that No Time To Die will be his last film as James Bond. The actor made the revelation during an appearance on The Late Show With Stephen Colbert.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X