நச்சுனு 4 போட்டோ... விதவிதமான சர்ப்ரைஸ்கள்: தனுஷிற்கு பேஸ்புக்கில் குவிந்த பிறந்தநாள் வாழ்த்து!

லண்டன்: நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் தனுஷின் பிறந்தநாள் பொழுது லண்டனில் கழிந்தமையால், அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே.

ஆதி காலம் தொட்டு பிறந்த நாள் காணும் மன்னர்கள் மற்றும் தலைவர்களை அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்தி பரிசு வழங்குவது வழக்கம் தானே. அதை இன்றளவும் பின்பற்றி வரும் நம் மக்கள், தனுஷ்-ன் பிறந்த நாள் பரிசாக சில புகைப்படங்களை பேஸ்புக் வாயிலாக அவருக்கு அன்பளிப்பாக அளித்துள்ளனர்.

இதோ, அவை உங்கள் பார்வைக்கு....

மை லைப்... மை ரூல்ஸ்...

மை லைப்... மை ரூல்ஸ்...

முதல் படமே அலப்பறையைக் கூட்டுகிறது. ஸ்டைலாக சிகரெட்டை பத்த வைத்த படி தனுஷ்... அருகில் ‘என் வாழ்க்கை, என் இஷ்டம்' என வாசகம்... ரூல்ஸை திருப்பிப் போட்டு வித்தியாசத்தை சீமியாடிக்ஸாகக் காட்டியிருக்கிறார் ஒரு ரசிகர்.

தனுஷின் பட வரிசை...

தனுஷின் பட வரிசை...

தனுஷ் நடித்த படங்களின் ஸ்டில்களைச் சேர்த்து அழகிய பிரேம் போட்டிருக்கிறார் ஒரு ரசிகர். சூப்பர்பா...

விருது நாயகன்...

விருது நாயகன்...

தனுஷ் விருது வாங்கும் படங்களின் தொகுப்பைச் சேர்த்து வெளியிட்டிருக்கிறார் ஒரு ரசிகர்.

சாக்லெட் பாய்...

சாக்லெட் பாய்...

தனுஷின் அழகிய படம் ஒன்றை போட்டு, அழகிய பேக் ரவுண்ட் தீமில் போறி பறக்கிறது இந்தப் போட்டோ...

சோ... க்யூட்

சோ... க்யூட்

இந்த போட்டோவில், கிப்ட், பலூன் எல்லாம் சேர்த்து ‘யாரடி நீ மோகினி' ஸ்டில்லில் க்யூட்டாக இருக்கிறார் தனுஷ்.

சிங்கிள் சிங்கம்...

சிங்கிள் சிங்கம்...

வாழ்த்தட்டை ஸ்டைலில் சிங்கிளாக மன்மதராசா படம்...

அன்புள்ள அண்ணனுக்கு...

அன்புள்ள அண்ணனுக்கு...

தனுஷை தன் சகோதரனாக பாவித்து. ஒரு ரசிகர் உருவாக்கியுள்ள போட்டோ... வாசகங்கள் மனதை தொடுகிறது...

மயக்கும் தனுஷ்...

மயக்கும் தனுஷ்...

மயக்கம் என்ன படத்தில் தனுஷின் மயக்கும் ஸ்டில் இது... கேமராவுடன் சூப்பராக போச் தருகிறார்.

இது ஒரு ‘தனுஷ்’ காலம்...

இது ஒரு ‘தனுஷ்’ காலம்...

இது மற்றொரு ரசிகரின் படைப்பு... தனுஷின் பன்முகப் படக்களின் தொகுப்பு... சாக்லேட் பாய் முதல் சாகச ஹீரோவாக நடித்தது வரை உள்ள போட்டோக்கள்.

ஒய் திஸ் கொலைவெறி...

ஒய் திஸ் கொலைவெறி...

3 படத்தில் வரும் தனுஷின் வித்தியாசமான ஸ்டில். தாடியெல்லாம் வைத்து சூப்பராக இருக்கிறார் சுள்ளான்.

உத்தமபுத்திரன் தனுஷ்....

உத்தமபுத்திரன் தனுஷ்....

ஹேப்பி பர்த்டே தலைவா என்ற வாசகத்துடன் உத்தமபுத்திரன் ஸ்டில்... சிரிப்பில் மனதை கொள்ளையிடுகிறார் தனுஷ்.

நச்சுனு நாலு போட்டோ...

நச்சுனு நாலு போட்டோ...

தனுஷின் நாலு படங்களை வைத்து அழகிய வாழ்த்து தயாரித்திருக்கிறது ஒரு ரசிகர் வட்டம். நாலுமே நச் போட்டோக்கள்...

லவ் ஸ்டாம்ப்...

லவ் ஸ்டாம்ப்...

தனுசுக்கு போட்டோஷாப் மூலம் பிறந்தநாள் தொப்பி போட்டு, லவ் ஸ்டாம்ப் ஒட்டி, தன் இதயத்தையே பிறந்த நாள் பரிசாக அனுப்பியிருகிறாராம் ஒரு ரசிகர்.

லவ் பெயிலியர் சாங்...

லவ் பெயிலியர் சாங்...

தனுஷும் அவரது நண்பரும் நடிகருமான சிவகார்த்திக்கேயனும் எதிர்நீச்சர் படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றில் ஆடும் போட்டோ...

ராஞ்ச்னா...

ராஞ்ச்னா...

அறிமுகமான முதல் ஹிந்தி படத்திலேயே, 100 கோடியைத் தாண்டி வசூல் சாதனை புரிந்து வரும் ராஞ்சனா ஸ்பெஷல் போட்டோ. ராஞ்ச்னா நாயகியுடன் தனுஷ்...

பாடும் தனுஷ்...

பாடும் தனுஷ்...

யுவனுடன் தனுஷ் இருக்கும் போட்டோ. என்ன பாட்டு தலைவா படறீங்க..? வெகு நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட போட்டோ என்பது தனுஷ் மற்றும் யுவனைப் பார்க்கும் போதே தெரிகிறது. அற்புதமான படம்...

நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்...

நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்...

இதுவும் ஒரு வாழ்த்துஅட்டை ஸ்டைல்... வானில் பறக்கும் தனுஷ் வாழ்வில் இன்னும் உயர வாழ்த்துகிறார் போலும் அந்த ரசிகர்...

புதுப்பேட்டை....

புதுப்பேட்டை....

புதுப்பேட்டைய்யில் வரும் கதாபாத்திரத்தின் கார்ட்டூன்... கண்களிலேயே கதை சொல்கிறார் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X