திரைத் துளி
திருடா திருடி நாயகன் தனுஷ் ரசிகர்கள் கீழே தள்ளியதால், காயம் அடைந்தார். அவரது கைமுறிந்தது.
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றிருந்த தனுஷ் இன்று சென்னைதிரும்பினார்.
12 மணிக்கு தி.நகர் ராஜமன்னார் தெருவில் உள்ள தனது அலுவலகம் சென்றார்.அவரைப்பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அங்கு காத்திருந்தனர்.
அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் தனுஷ் கீழே விழுந்தார். அதில் அவரது கை உடைந்து ரத்தம் கொட்டியது.தலையிலும் காயம் ஏற்பட்டது.
உடனே அப்பல்லோ கொண்டு செல்லப்பட்ட தனுஷ், அங்கிருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments
actress cheating chennai cheque glamour heroine judge justice roja saidapet sex shop tamil news tamilnadu thatstamil


Click it and Unblock the Notifications