எனக்குப் போயி.. அட போங்க சார்.. தாணு பிளானை தவிடுபொடியாக்கிய தனுஷ்!

By Staff

சென்னை: நடிகர் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சூட்ட ஆசைப்பட்டார் கலைப்புலி தாணு. ஆனால் அதெல்லாம் வேண்டாம். ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான். அது ரஜினி மட்டுமே என்று கூறி ஏற்க மறுத்து விட்டார் தனுஷ்.

தமிழ் ஹீரோக்கள் கோலிவுட் தாண்டி டோலிவுட், சாண்டல்வுட் போவதையே என்னமோ ஆஸ்கார் விருதை அள்ளிக்கிட்டு வந்ததுபோல் பெரிதாய் ஸீன் போட்டுப் பேசுவார்கள். ஆனால் பாலிவுட்டுக்கு எப்பவோ போய் தடம்பதித்துவிட்டு இப்போது ஹாலிவுட்டிலும் நடித்து நச்சுன்னு பெயர் வாங்கிவிட்டவர் தனுஷ். ஆனாலும் பையன் அதையெல்லாம் பெருசா அலட்டிக்க மாட்டார்.

Danush refutes to accept ilaya super star title

இந்நிலையில் இவரை வைத்து தயாரிப்பாளர் தாணு பெரிதாய் ஒரு பிளான் பண்ணினார். அதாவது தனுஷுக்கு 'இளைய சூப்பர் ஸ்டார்! என பட்டமளிக்கிறேன்' என்று அறிவித்தார் தாணு. இதே தாணுதான் ரஜினிகாந்துக்கு 'சூப்பர் ஸ்டார்' எனும் பட்டத்தை அந்த காலத்தில் தந்தவர். அதன் பின்னர் உலகம் முழுக்க அது பரவியது.

இந்நிலையில் ரஜினியின் மருமகன் தனுஷுக்கு இந்த 'இளைய' பட்டத்தை தர தாணு பிளான் பண்ணினார். அதுவும் தனுஷின் பிறந்த நாளன்று இதைத் தர திட்டமிட்டார். ஆனால் தாணுவின் இந்த முடிவை தரமாக பிளாக் செய்துவிட்டார் தனுஷ்.

தாணுவிடம் "சார் உங்களுக்கு தெரியாதது இல்லை. சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி சார் (ஆம் அவரை வெளியில் 'மாமா' என குறிப்பிடுவதில்லை தனுஷ்) மட்டும்தான். அதுல இளைய, ஜூனியர், மூத்த அப்படின்னெல்லாம் யாரும் பங்குக்கு வரவே முடியாது. நானும் வரமுடியாது, கூடாது, மாட்டேன். அதனால ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாம். அந்தளவுக்கு நான் இன்னும் வளரவுமில்லை" என்று பொலைட்டாக தடுத்துவிட்டார்.

தாணு தனக்கு இப்படியொரு பட்டத்தை கொடுத்து, ஏதோ பெரியளவில் பிளான் பண்ணுகிறாரோ என்பதே தனுஷின் எண்ணம். ஆனாலும் அந்தப் பட்டத்தை ஏற்றுக் கொண்டு ரஜினியிடம் போட்டிக்கு வந்து நிற்கவும் தனுஷ் விரும்பவில்லை. அதனாலேயே தடுத்துவிட்டாராம்.

இந்த தகவல்கள் அப்படியே ரஜினியின் காதுகளுக்கு போக, மருமகன் மீது செம்ம பாசமாகிட்டாராம் மனுஷன்.

இருக்காதா பின்னே!

- ஜி.தாமிரா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X