திரைத் துளி
நடிகர் தனுஷின் வீட்டின் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். ஏராளமான பணமும்ஆவணங்களும் அப்போது கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
காதல் கொண்டேன், திருடா திருடி வெற்றியைத் தொடர்ந்து சுமார் 12 படங்களில் நடிக்க புக் செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு படத்துக்கும் ரூ. 1 கோடி வரை அவருக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதில் பெரும் தொகைஅட்வான்சாகக் கொடுக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இப்போது அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு அவரது கால்ஷீட் புல்.
மேலும் காதல் கொண்டேன் படம் பல கோடிகளை ஈட்டியுள்ளது. இதைத் தயாரித்து அவரது தந்தையானஇயக்குனர் கஸ்தூரி ராஜா தான்.
இந் நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இவர்களது வீட்டில் வருவான வரித்துறையினர் திடீர்சோதனையில் இறங்கினர். கஸ்தூரி ராஜா, தனுஷின் அண்ணனான இயக்குனர் செல்வராகவன், தாயார்விஜயலட்சுமி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.
தனுஷ் சூட்டிங்குக்காக வெளிநாட்டில் உள்ளார்.
வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில் கஸ்தூரி ராஜாவின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.வீட்டில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











