»   »  தனுஷ் மீது மீண்டும் வழக்கு!

தனுஷ் மீது மீண்டும் வழக்கு!

Subscribe to Oneindia Tamil

நடிகர் தனுஷிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும். எனவே அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடவேண்டும் என்று கோரி ராகவா படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

ராகவா படத்தில் நடிக்க மறுப்பதாகக் கூறி தனுஷ் மீது சென்னை 3-வது குற்றவியல் நீதிமன்றத்தில் பார்க்கர்பிரதர்ஸ் பட நிறுவனம் சார்பில் ரூபஸ் பார்க்கர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உதவிநீதிபதி சோமசேகர் இரு தரப்பினரும் சமசரமாகி பேசிக் கொள்ளும்படி உத்தரவிட்டார்.

இந் நிலையில் பார்க்கர் பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் அதே நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், நீதிபதியின் உத்தரவுப்படி, தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா சமரசப் பேச்சுக்கு வந்திருந்தார்.

ஆனால், தனக்கும், தனுஷுக்கும் இடையே தற்போது சரியான பேச்சுவார்த்தை இல்லை என்றும், எனவே ராகவாவிஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்றும் கூறினார். பேச்சுவார்த்தைக்கு தனுஷ் வரவில்லை.

எனவே தனுஷை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டும். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தஅனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இது தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்றுதனுஷ் தரப்பு வழக்கறிஞர் கோரினார்.

இதையடுத்து 2 நாள் அவகாசம் கொடுத்து 29ம் தேதிக்கு மனுவை ஒத்திவைத்து நீதிபதி சோமசேகரன்உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil