தனுஷுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

By Staff

ட்ரீம்ஸ் படத்திற்குப் பிறகு புக் ஆன படங்கள் குறித்த பட்டியலை உடனடியாகத் தாக்கல் செய்யுமாறு சென்னைநீதிமன்றம், நடிகர் தனுஷுக்கு உத்தரவிட்டுள்ளது.

ராகவா படத்தில் நடிக்க மறுத்ததால் நீதிமன்றப் படியேறிய நடிகர் தனுஷ், ட்ரீம்ஸ் படத்தில் நடிக்க மறுத்ததால்,ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மீண்டும் நீதிமன்றப் படியேறும் நிலை உருவாகியுள்ளது.

தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாதான் ட்ரீம்ஸ் படத்தை இயக்கி வந்தார். முக்கால்வாசிப் படம் முடிவடைந்தநிலையில் கதை பிடிக்கவில்லை என்று தனுஷ் தனது தந்தையிடம் கூறவே, அதற்கு தயாரிப்பாளர் தரப்பு ஒத்துக்கொள்ளாததால், படம் பாதியில் நின்றது.

இதைத் தொடர்ந்து ட்ரீம்ஸ் படத் தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்தவழக்கை விசாரித்த நீதிபதி பாலசுப்ரமணியன், தனுஷுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்தநோட்டீஸுக்கு தனுஷ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பதில் மனுவை இன்று பரிசீலித்த நீதிபதி பாலசுப்ரமணியன், விளக்கம் சரியாக இல்லை. ட்ரீம்ஸ் படத்திற்குப் பிறகுதனுஷ் புக் ஆன படங்கள் குறித்த முழுமையான விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறிஉத்தரவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X