LKG: டப்பாவ கிழிச்சான்... கொய்யால தெறிக்கவுட்டான்... ஆர்ஜே பாலாஜியின் அடுத்த அட்ராசிட்டி!

எல்கேஜி படத்தில் இடம்பெற்றுள்ள டப்பாவ கிழிச்சான் பாடல் வெளியாகியுள்ளது.

Recommended Video

சர்ச்சையில் ஸ்ருதி ஹாசன் பாடிய டப்பாவ கிழிச்சான் பாடல்- வீடியோ

சென்னை: எல்கேஜி படத்தில் இடம்பெற்றுள்ள டப்பாவ கிழிச்சான் பாடல் வெளியாகி டிவிட்டரில் டிரெண்டிங்காகியுள்ளது.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்துள்ள படம் எல்கேஜி. கே.ஆர். பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். நாஞ்சில் சம்பத், ஜேகே ரித்திஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Dappaava kizhichaan: Another atrocity from R.J.Balaji

சமகால அரசியலை நையாண்டி செய்யும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 2ம் தேதி சென்னையில் நடைபெற்ற இளையராஜா 75 நிகழ்ச்சியின் போது இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. பசு காவலர்கள், தெர்மாகோல் என தற்போதை அரசியல் டிரெண்டிங்கில் உள்ள எல்லா விஷயங்களையும் சகட்டு மேனிக்கு கலாய்த்திருந்தார்கள். எனவே இந்த டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'டப்பாவ கிழிச்சான்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பா.விஜய் வரிகளில் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்பாடலை, ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். டிரெய்லரை போலவே இந்த பாடலும் செம கலாயாக இருக்கிறது.

Dappaava kizhichaan: Another atrocity from R.J.Balaji

"டப்பாவ கிழிச்சான்... கொய்யால தெறிக்கவுட்டான்... அண்ணாத்த மாஸ் இல்ல பாஸ் இல்ல ஜெயிச்சுப்புட்டா லேஸ் இல்ல" என அப்பாடல் வரிகள் இருக்கின்றன. இப்பாடல் டிவிட்டரில் தற்போது டிரெண்டிங்காகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X