ஒரு வருடம் லிவிங் டுகெதர்.. ஒரு வழியாக காதலரை கரம்பிடித்த தர்பார் பட நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: ஒரு வருட லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு பிறகு நடிகை ஷமதா அஞ்சன் தனது காதலரை கரம் பிடித்துள்ளார்.

நடிகை ஷமதா அஞ்சன் பிரபல மாடல் அழகி ஆவார். பல விளம்பர படங்களில் நடித்துள்ள ஷமதா இந்திய சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்ததன் முதல் முறையாக சினிமாவிலும் நடித்துள்ளார் ஷமதா.

ரஜினியுடன்..

ரஜினியுடன்..

தர்பார் படத்தில் மும்பையில் ரஜினிகாந்துக்கு உதவும் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ஷமதா. தர்பார் படத்தில் 40 நிமிட காட்சிகளில் ரஜினியுடன் இணைந்து ட்ராவல் செய்திருப்பார் நடிகை ஷமதா.

ஒரு வருடம் லிவிங் டுகெதர்

ஒரு வருடம் லிவிங் டுகெதர்

இந்நிலையில் நடிகை ஷமதா தனது காதலரை திருமணம் செய்துள்ளார். காதலர் கவுரவ் வர்மாவுடன் திருமணம் செய்துகொள்ளாமல் ஓராண்டு வாழ்ந்து வந்த ஷமதா ஒரு வழியாக அவரை மணம் முடித்துள்ளார்.

திருமண போட்டோக்கள்

திருமண போட்டோக்கள்

ஷமதா அஞ்சன் பிப்ரவரி 8-ஆம் தேதி தனது காதலர் கெளரவ் வர்மாவை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அதில் நெருங்கிய நண்பர்களும் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் தனது திருமண போட்டோ இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ஷமதா தனது திருமணம் குறித்தும் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கை முழுவதும்..

வாழ்க்கை முழுவதும்..

ஒன்றாக ஒரு வருடத்தை கழித்தப் பிறகு, வாழ்நாள் முழுவதையும் ஒருவருக்கொருவர் செலவிட விரும்புகிறோம் என்று எங்களுக்குத் தெரிந்தது. நான் தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக மிகவும் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். புதிய ஆண்டு ஒரு அழகாக தொடங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தர்பார் டூ கர்பார்

தர்பார் டூ கர்பார்

திருமணத்தின் போது எடுத்த பல்வேறு போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஷமதா அஞ்சன் தர்பார் டூ கர்பார் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும் கேப்ஷன் கிரெடிட் கணவருக்குதான் என்றும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X