தர்பார் படுத்தும் பாடு: முருகதாஸுக்குன்னே கெளம்பி வருவாங்களோ?
Recommended Video
சென்னை: தர்பார் படத்தை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸ் ரொம்ப பாவம்.
தர்பார் படத்தின் போட்டோஷூட்டின்போதே புகைப்படங்கள் கசிந்தது. அதில் இருந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோக்கள், புகைப்படங்கள் தொடர்ந்து கசிந்து கொண்டிருக்கின்றன.

இயக்குநர் முருகதாஸும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கத் தான் செய்கிறார். அப்படி இருந்தும் வீடியோக்கள் தொடர்ந்து கசிகின்றன. ரஜினி, நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் ஆகியோரின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கசிந்தன.
இந்நிலையில் படத்தில் சேர்ந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் தலிப் தாஹில் வேறு சும்மா இல்லாமல் ரஜினி மும்பையை சுத்தம் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், நான் அவருக்கு உதவுகிறேன் என்று கதையை தெரிவித்துவிட்டார்.
சர்கார் படத்தின் கதை வெளியே கசியாமல் இருக்க முருகதாஸ் என்ன செய்தாலும் கசிந்து விடுகிறது. தர்பார் படத்திற்கு வில்லன்கள் வெளியே இல்லை, படக்குழுவில் தான் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
ரஜினி மீது இருக்கும் பாசத்தில், ஆர்வக்கோளாறில் இப்படி செய்கிறார்களா அல்லது முருகதாஸை கடுப்பேற்றி வேடிக்கை பார்க்க செய்கிறார்களா என்று தெரியவில்லை. எது எப்படியோ, முருகதாஸ் பாடு தான் பாவமாக உள்ளது.


Click it and Unblock the Notifications