தர்பார் டப்பிங் ஆரம்பம்.. ஆடியோ லான்ச் எப்போ தெரியுமா?
Recommended Video
சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினிகாந்தின் தர்பார் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் தர்பார் படத்தில் நடித்து வருகின்றனர்.

தர்பார் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், இன்று முதல் தர்பார் படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசத் தொடங்கியுள்ளார்.
இந்த அறிவிப்பை லைகா நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவித்துள்ளது.
மேலும், தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 7ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆனால், ஆடியோ லான்ச் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் லைகா நிறுவனம் அறிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, அனிருத்தின் புகைப்படத்தை போட்டு, ஃபர்ஸ்ட் சிங்கிள் இம்மாதம் வெளியாகும் என்ற சிக்னலை கொடுத்துள்ளது லைகா நிறுவனம்.
தர்பார் படத்தில் நடிகர் ரஜினி, எந்திரன் 2.0 ரோபோ மற்றும் சந்திரமுகியில் வரும் வேட்டையன் போல நெகட்டிவ் ஷேடிலும் நடித்துள்ளாராம்.
அதுமட்டுமின்றி, பல வருடங்கள் கழித்து மீண்டும் தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காக்கி யுனிஃபார்ம் போட்டு ஆதித்ய அருணாசலம் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார்.
நிச்சயம் வரும் பொங்கல் தலைவர் பொங்கலாகத் தான் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன.


Click it and Unblock the Notifications











