twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தர்பார் இசை வெளியீட்டு விழா.. அந்த மூணாவது குட்டிக் கதை யாருக்குத் தெரியுமா?

    |

    சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    வழக்கமாக ரஜினிகாந்த் மேடை ஏறி பேசும் போது ஒரு குட்டிக் கதை சொல்வது வழக்கம்.

    ஆனால், இந்த முறை ஒன்றல்ல மூன்று குட்டிக் கதைகளை கூறியுள்ளார். மூன்றாவதாக அவர் கூறிய குட்டிக் கதையில் ஒரு சுவாரஸ்யமும் சின்ன ட்விஸ்டும் இருக்கிறது.

    பர்த்டே கொண்டாட்டம்

    தர்பார் இசை வெளியீட்டு விழாவுடன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது. தொகுப்பாளர்களாக இருந்த விக்னேஷ்காந்த் மற்றும் விஜே ரம்யா இருவரும் இணைந்து அரங்கத்தினர் அனைவரும் ரஜினிக்கு ஹேப்பி பர்த்டே பாடல் பாடும்படி கூற அந்த அரங்கமே அதிர ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து மழை பொழிந்தனர்.

    மாஃபியா டிரைலர்

    தர்பார் படத்தை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியாக தயாராக உள்ள மாஃபியா படத்தின் டிரைலர் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய், எந்த நாட்டுக்கு போனாலும், சூப்பர் ஸ்டார் எங்க ஊருடான்னு கெத்தா சொல்வோம் என மேடையில் தீ பறக்க பேசினார்.

    டிவியில் எப்போ

    டிவியில் எப்போ

    தர்பார் இசைவெளியீட்டு விழா சன் டிவியில் வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. சமூக வலைதளங்களில் நேற்றைய தர்பார் இசை வெளியீட்டு விழா, பலரது மொபைல் போன்களில் பிடிக்கப்பட்டு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

    மூணாவது குட்டிக் கதை

    மூணாவது குட்டிக் கதை

    தர்பார் இசை வெளியீட்டு விழாவில் தனது அரசியல் என்ட்ரி குறித்து ரஜினி பேசுவார் என பலரும் காத்திருந்த நிலையில், அது குறித்து ரஜினி நேரடியாக எதுவும் பேசவில்லை. ஆனால், அவர் கூறிய ஒவ்வொரு குட்டிக் கதைகளும் மறைமுகமாக அவரது அரசியல் என்ட்ரி குறித்தே இருந்தன.

    சமூக வலைதளங்கள் மற்றும் அரசியலில் இப்போதெல்லாம் நெகட்டிவிட்டி அதிகம் பரவி வருகிறது எனக் கூறிய ரஜினி, மூணாவது குட்டிக் கதையைக் கூறினார்.

    கடவுள் வரம்

    கடவுள் வரம்

    ஒரு சின்ன பையன் தினமும் 20 மணி நேரம் வேலை செய்றான், கடுமையா உழைக்கிறான். ஆனா, அவனுக்கான அங்கீகாரமோ, பாராட்டோ கிடைக்கலை. அவன் தினமும் அதே மாதிரி வேலை செஞ்சிட்டு வரான்.. கடவுள் அவன் முன்னாடி தோன்றுகிறார்.

    தம்பி உனக்கு என்ன வேணும்னு கேளுன்னு சொல்றாரு, அதுக்கு அவன் என்ன கேட்கணும்னு தெரியலைன்னு சொல்றான்.

    கடவுளுக்கே ஒரே ஆச்சர்யம்.. அதுக்குப் அப்புறம் அவன், எனக்கு என்ன கொடுக்கணும்னு தோணுதோ கொடுங்க என கூற,

    கடவுள் அவனுக்கு அன்பையும் சந்தோஷத்தையும் கொடுத்தாரு.. அதுக்கப்புறம் அந்த பையன் ரொம்ப சந்தோஷமா தன்னுடைய வேலையை தொடர்ந்து செஞ்சான். அவனை எல்லாருக்கும் பிடிக்க ஆரம்பிச்சது. அதனால அன்பை பரப்புங்க.. என நடிகர் ரஜினிகாந்த் தனது குட்டிக் கதையை நிறைவு செய்தார்.

    யாருக்கு இந்த கதை

    யாருக்கு இந்த கதை

    வெற்றியை தேடி உழைக்கிற எல்லாருக்கும் இந்த கதை பொருந்துற மாதிரி இருந்தாலும், சூப்பர்ஸ்டார் தனக்குத் தானே இந்த கதையை மேடையில் கூறி உள்ளார். அந்த பையனே ரஜினி தான். கடவுள் கொடுத்த வரத்தால், இவ்வளவு தூரம் இவ்வளவு பேரோட அன்பை பெற்றுருக்காரு, இனியும் கடவுள் வரம் தொடரும் என்பதையே மறைமுகமாக கூறியுள்ளார்.

    English summary
    Darbar Audio Launch function happened yesterday. Super Star Rajinikanth’s birthday celebration and songs out in that event. Rajinikanth once again come with his hidden meaning short stories.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X