சர்கார் வசூலை முறியடிக்காத தர்பார்.. சோலோ ரிலீசாகியும் இத்தனை கோடி தான் வசூலா?

Recommended Video

Darbar Vs Sarkar | Rajini Vs Thalapathy | A.R.Murugadoss | Nayanthara

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் நேற்று வெளியானது. தர்பார் படத்தின் முதல் நாள் வசூல் விஜய்யின் சர்கார் மற்றும் 2.0 படங்களின் முதல் நாள் வசூலை முறியடிக்கவில்லை என்ற பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்கள் வெளியாகியுள்ளன.

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ஸ்ரீமன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் தர்பார் படம் உருவாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான தர்பார் படத்திற்கு பெரிய படங்கள் ஏதும் போட்டியாக ரிலீஸ் ஆகவில்லை.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால், மேலும், தர்பார் படத்தின் வசூல் பாதிக்கும் என கணிக்கப்படுகிறது.

சென்னை வசூல்

சென்னை வசூல்

தர்பார் திரைப்படம் விடுமுறை அல்லாத வியாழக்கிழமையான நேற்று வெளியானது. சென்னையில் மட்டும் முதல் நாள் வசூலாக 2.27 கோடி வசூலை தர்பார் படம் ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர்கள் ரிப்போர்ட் தெரிவித்துள்ளனர்.

சர்காரை முந்தவில்லை

சர்காரை முந்தவில்லை

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் செய்த சாதனையை தர்பார் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்கார் வசூல் சாதனையை தர்பார் முறியடிக்கவில்லையாம். சென்னையில் சர்கார் முதல் நாள் வசூலாக 2.37 கோடியை வசூல் செய்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படம் சென்னையில் முதல் நாளில் 2.64 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில்

தமிழ்நாடு முழுவதும் தர்பார் படம் 15 முதல் 18 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தர்பார் படம் பொங்கல் விடுமுறை நாட்களில் மேலும் வசூலை குவிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

அமெரிக்காவில் தர்பார் திரைப்படம் 100க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் வெளியானது. அங்கு சுமார் 78 லட்சம் அளவுக்கு தர்பார் வசூலித்துள்ளது.

மற்ற நாடுகளில்

மற்ற நாடுகளில்

சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் தர்பார் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்து வருகிறதாம். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், முதல் வார இறுதியில் நல்ல வசூல் பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளவில் தர்பார் வசூல்

உலகளவில் தர்பார் வசூல்

நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக கலக்கியுள்ள தர்பார் படத்தில் அவரது கரிஷ்மா மற்றும் ஸ்டைல் செம்மயாக இருக்கிறது என ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றன. உலகளவில் தர்பார் திரைப்படம் 35 முதல் 40 கோடி வரை முதல் நாளில் வசூலித்திருப்பதாக தெரிகிறது.

லைகா

லைகா

2.0 படத்திற்கு அதிகாரப்பூர்வமாக பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்டுகளை லைகா நிறுவனம் அறிவித்தது. அதே போல ரஜினியின் தர்பார் படத்திற்கும் அதிகாரப்பூர்வ தகவலை லைகா அறிவிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X