twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூப்பர்ஸ்டாரின் தர்பார் 3ம் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் உலகளவில் எவ்வளவு தெரியுமா?

    |

    Recommended Video

    Darbar Public Opinion | Darbar Audience Review | Rajini | Nayanthara | Anirudh

    சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் படம் தொடர்ந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    தர்பார் படம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், முதல் பாதி படத்திற்காகவே தாராளமாக தியேட்டர் போய் பார்க்கலாம் என ரசிகர்கள் தர்பார் படத்தை பார்த்து வருகின்றனர்.

    தர்பார் படம் வெளியான முதல் இரண்டு நாளில் உலகளவில் 70 கோடி வரை வசூல் செய்திருந்தது.

    மூன்றாம் நாளான நேற்றும் 80% முதல் 85% வரை தியேட்டர்களில் தர்பார் படத்தை மக்கள் கண்டு ரசித்துள்ளனர்.

    தர்பார் படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் 104 கோடி வரை வசூல் செய்துள்ளதாக ரிப்போர்ட்டுகள் வெளியாகியுள்ளன.

    3ம் நாள் சென்னை வசூல்

    3ம் நாள் சென்னை வசூல்

    ஆதித்யா அருணாச்சலமாக ரஜினிகாந்த் கலக்கியுள்ள தர்பார் திரைப்படம் சென்னையில் முதல் நாள் வசூலாக 2.27 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது. இரண்டாம் நாளில் 1.75 கோடி வசூல் செய்திருந்த நிலையில், மூன்றாம் நாளான நேற்று 1.5 கோடி வசூல் செய்து அசத்தி வருகிறது.

    3ம் நாள் தமிழ்நாட்டு வசூல்

    3ம் நாள் தமிழ்நாட்டு வசூல்

    நெகட்டிவ் விமர்சனங்கள், ட்ரோல்கள் எழுந்தாலும், பாக்ஸ் ஆஃபிஸில் சுமூகமாகவே தர்பார் படம் ஓடி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் 15 முதல் 18 கோடியாக இருந்த நிலையில், இரண்டாம் நாள் 12 முதல் 15 கோடி வரை தர்பார் வசூலித்திருந்தது. மூன்றாம் நாளான நேற்று 8 முதல் 10 கோடி வரை வசூல் செய்துள்ளது.

    இந்தியா முழுவதும்

    இந்தியா முழுவதும்

    தமிழ்நாட்டை தவிர்த்து இந்தியா முழுவதும் தர்பார் படம் வசூலில் சற்று பின் தங்கியுள்ளது. ஆந்திராவில் மகேஷ் பாபுவின் படம் வெளியாகியுள்ளதால், அங்கு தர்பார் படத்தின் வசூல் சரிந்துள்ளது. பாலிவுட்டிலும் தர்பார் படத்துக்கு போதுமான வசூல் கிடைக்கவில்லை. தமிழ்நாடை தாண்டி இந்தியா முழுவதும் தர்பார் வசூல் 5 முதல் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    உலகளவில் மூன்றாம் நாள் வசூல்

    உலகளவில் மூன்றாம் நாள் வசூல்

    தர்பார் படம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா என பல உலக நாடுகளில் ரிலீசாகியுள்ளது. உலகளவில் முதல் நாளில் 40 முதல் 50 கோடி வரை தர்பார் படம் வசூலான நிலையில், இரண்டாம் நாளில் 60 முதல் 70 கோடி வரை தர்பார் வசூலை ஈட்டியுள்ளது. மூன்றாம் நாளான நேற்று மட்டும் 25 முதல் 30 கோடி வரை வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

    100 கோடி கிளப்

    100 கோடி கிளப்

    போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பில் மிரட்டியுள்ள தர்பார் திரைப்படம் உலகளவில் 100 முதல் 104 கோடி வரை வசூல் செய்துள்ளதாக ரிப்போர்ட்டுகள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமையான இன்று தர்பார் படம் உலகளவில் நல்ல வசூல் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி இல்லை

    போட்டி இல்லை

    தர்பார் படத்துக்கு போட்டியாக இந்த வாரம் எந்த பெரிய படங்களும் ரிலீஸ் ஆகாதததால் தர்பார் படம் வசூலில் நல்ல வேட்டை நடத்தி வருகிறது என பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வரும் புதன்கிழமை தனுஷின் பட்டாஸ் படம் வெளியாகவுள்ளதால், அதன்பிறகு தர்பார் படத்தின் வசூல் தமிழ்நாட்டில் பெரிய அளவில் சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Darbar has manged to rake in ₹100 crore worldwide on its third day at the box office. So many negative reviews will started to pull down the Rajinikanth's Darbar worldwide collection.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X