ஒன் மேன் ஷோ.. ரஜினி கரிஷ்மா வேற லெவல்.. தர்பார் செலிபிரிட்டி விமர்சனம்!

Recommended Video

Darbar Movie Review by Anandhan | Rajinikanth | Nayanthara | AR Murugadoss | Filmibeat Tamil

சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் தர்பார் படம் இன்று வெளியாகியுள்ளது.

அதிகாலை முதலே தியேட்டர்களில் பட்டாசுகள் வெடித்து தீபாவளி போல கொண்டாட்டங்கள் அதகளப்படுகிறது.

லதா ரஜினிகாந்த், லாரன்ஸ், தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் குடும்பத்தினர் முதல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து ரோகிணி தியேட்டரில் பார்த்து ரசித்தனர்.

தர்பார் படம் எப்படி இருக்கிறது என பல சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ஒன்மேன் ஷோ

இளம் தலைமுறை சினிமா பிரபலங்கள் முக்கால்வாசி பேர் கிட்டத்தட்ட சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் தான். நடிகர் சிவகார்த்திகேயன் அதிகாலையிலேயே தர்பார் படத்தை பார்த்து விட்டு, இது தலைவர் ரஜினிகாந்தின் ஒன்மேன் ஷோ, அவருடைய எனர்ஜி, கரிஷ்மா எல்லாம் தீயாக இருக்கிறது என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

வா தலைவா

தலைவர் தர்பார் இன்று ரிலீசாவதை முன்னிட்டு வா தலைவா என தனது ட்விட்டரில் தர்பார் ரிலீசுக்காக ரசிகர்களை விட எவ்வளவு வெறித்தனமாக காத்திருக்கிறேன் என்பதை தனுஷ் நிரூபித்துள்ளார். தர்பார் படத்தை இன்று குடும்பத்துடனும் ரசிகர்களுடனும் தனுஷ் கண்டு ரசித்தார்.

தர்பார் திருவிழா

தர்பார் படத்தின் இந்தி வெர்ஷனான சும்மா கிழி மற்றும் டும் டும் பாடல்களை பாடிய பாலிவுட் பாடகர் நாகாஷ் அஸிஸ் தியேட்டர்களில் கொண்டாடப்படும் தர்பார் திருவிழா புகைப்படங்களை பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சூப்பர்மா

சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகனான சிம்புவும் இன்று காலை தர்பார் படத்தை பார்த்துள்ளார். வெளியே வந்த சிம்புவிடம் படம் எப்படி இருக்கிறது என மீடியாக்கள் கேட்க, சூப்பர்மா என சொல்லிவிட்டு காரில் ஏறி சென்றுள்ள வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகிறது.

2020-ன் முதல் பிளாக்பஸ்டர்

2020ம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டராக சூப்பர்ஸ்டாரின் தர்பார் இருக்கும் என பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அழகா இருக்காரு

தலைவர் செம்ம ஸ்டைல், அழகா இருக்காரு, படம் மாஸ் என காமெடி நடிகர் சூரி தனது ட்விட்டர் விமர்சனத்தை வைத்துள்ளார்.

பொண்ணு சென்டிமென்ட்

தர்பார் படத்துல தலைவர் ஸ்டைல் வேற லெவல், பொண்ணு சென்டிமென்ட் சூப்பரா இருக்கு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என ராகவா லாரன்ஸ் ட்வீட் போட்டுள்ளார்.

மொபைல் ரெக்கார்டிங் இல்லை

சும்மா கிழி பாடலை தலைவர் ரசிகர்கள் ராம் முத்துராம் சினிமாஸ் தியேட்டரில் பயங்கரமாக என்ஜாய் செய்துள்ளனர். யாரும் மொபைல் போனில் ரெக்கார்டு பண்ணாமல் பாடலுக்கு டான்ஸ் போட்டு கொண்டாடியுள்ளதாக ராம் முத்துராம் சினிமாஸ் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Read more about: darbar தர்பார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X