ரெடியாகிறதா துப்பாக்கி 2.. சந்தோஷ் சிவன் ட்வீட்டின் ரகசியம் என்ன?

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் பிகில் பட கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் போது, பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், துப்பாக்கி 2 குறித்து ட்வீட் போட்டுள்ளார்.

சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று அதிகாலையிலேயே வெளியானது.

திரையரங்குகள், சமூக வலைதளங்கள் என அனைத்து இடங்களிலும் விஜய்யின் பிகில் குறித்த பேச்சுகள் தான்.

இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், துப்பாக்கி 2 குறித்த ட்வீட் போட்டுள்ளார்.

பிகில் தீபாவளி

பிகில் தீபாவளி

வரும் ஞாயிற்றுக்கிழமை தான் தீபாவளி பண்டிகை என்றாலும், விஜய் ரசிகர்களுக்கு இன்றே பிகில் படத்தின் ரிலீஸ் மூலம் தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது.

சிறப்பு காட்சிகளுக்கு நேற்று இரவு கடைசி நேரத்தில் தமிழக அரசு அனுமதியளித்த நிலையில், திட்டமிட்டபடி பல திரையரங்குகளில் காலை முதலே பிகில் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.

துப்பாக்கி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான துப்பாக்கி படம், மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். சந்தோஷ் சிவனின் மேஜிக்கல் லென்ஸில் விஜய் மிகவும் அழகாகவும் மாஸாகவும் தெரிந்திருந்தார்.

இப்போதான் பார்க்குறீங்களா

இப்போதான் பார்க்குறீங்களா

பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய வீடியோவை நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சந்தோஷ் சிவன், விஜய் பேச்சு அருமையென பதிவிட்டுள்ளார்.

பிகில் இசை வெளியீட்டு விழா நடந்து, நடிகர் விஜய் பேசிய பேச்சுக்கள் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இப்போதான் அந்த இசை வெளியீட்டு விழா பேச்சை பார்க்குறீங்களா என சந்தோஷ் சிவனிடம் விஜய் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

தர்பார் அப்டேட்ஸ்

தர்பார் அப்டேட்ஸ்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்திற்கும் சந்தோஷ் சிவன் தான் ஒளிப்பதிவாளர். தளபதி படத்திற்கு பிறகு சுமார் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் சந்தோஷ் சிவன் பணிபுரிகிறார். சந்தோஷ் சிவன் கேமராவில் க்ளிக் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

தீபாவளிக்கு தர்பார் குறித்த அப்டேட்ஸ் ஏதும் கிடைக்குமா என சந்தோஷ் சிவனிடம் ரஜினி ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், அவரோ விஜய் படம் குறித்த அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

வருமா

வருமா

பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய வீடியோவை பகிர்ந்த சந்தோஷ் சிவன், துப்பாக்கி 2வுக்காக வெயிட்டிங் எனக் கூறியுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் வேலை பார்த்து வரும் சந்தோஷ் சிவன், துப்பாக்கி 2வுக்காக வெயிட்டிங் என போட்டுள்ள நிலையில், தளபதி 65 படம் துப்பாக்கி 2 ஆக உருவாகும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X