தர்பார் மாஸாக வந்துள்ளது.. பொங்கலுக்கு வெளியாகிறது.. ரஜினிகாந்த் அதிரடி பேட்டி!
சென்னை: தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படப்பிடிப்பு மும்பையிலும், சென்னையிலும் நடந்து வருகிறது. இருவரும் முதல்முறை கூட்டணி சேர்ந்து இருப்பதால் இந்த படம் அதிக கவனம் பெற்றுள்ளது.

தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .கடந்த சில நாட்களுக்கு முன் தர்பார் படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியானது.
முதல் போஸ்டரில் பின்பக்கம் துப்பாக்கிகள், குண்டுகள் இருக்க ரஜினி கெத்தாக நிற்பது போல டிசைன் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது போஸ்டரில், நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்வது போல, பனியனில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
இதற்கு இடையில் ரஜினி போலீஸ் உடையில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தர்பார் படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தர்பார் படம் நன்றாக வந்துள்ளது. இந்த படம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











