இது எப்படி இருக்கு… தீபாவளி ரேசில் திடீரென களமிறங்கிய தர்பார்!
தீபாவளிக்கு விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில், ரஜினியின் தர்பார் பட்டாசுகள் சந்தைக்கு வந்துள்ளன.
சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ரஜினியின் தர்பார் திரைப்படம்.
நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகிறது.
இந்த படத்தில் ஆதித்யா அருணாச்சலம் எனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளதாக நிவேதா தாமஸ் சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார்.
சர்கார்.. தர்பார்..
நடிகர் விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ், தற்போது ரஜின்யை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகிறார். இரு படங்களும் அரசை குறிக்கும் விதமாக இருப்பதால், தர்பார் படத்திலும் அரசியல் வாடை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகில் தீபாவளி
அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வரும் அக்டோபர் 25ம் தேதி கார்த்தியின் கைதி மற்றும் விஜய்யின் பிகில் திரைப்படங்கள் வெளியாகின்றன. அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள பிகில் படத்திற்கு தான் திரையரங்குகள் முன்னுரிமை வழங்கி வருவதாகவும், இந்த தீபாவளி பிகில் தீபாவளியாக கொண்டாடப்படவுள்ளதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தீபாவளி ரேஸ்
பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் வெளியாகவுள்ள நிலையில், இந்த தீபாவளி ரேசிலும் தர்பார் கலந்து கொள்கிறது. உடனடியாக யாரும் பதறவோ குழம்பவோ வேண்டாம். தீபாவளி பண்டிகைக்காக விற்பனைக்கு வந்துள்ள பட்டாசுகளில் தர்பார் ரஜினியின் போஸ்டர்கள் பதித்த பட்டாசுகள் தான் இந்த தீபாவளி ரேசில் கலந்து கொள்கிறது.

வழக்கம்
ரஜினியின் புதுப்படங்கள் வருகிறது என்றாலே வழக்கமாக பட்டாசுகள், பொம்மைகள், கேக்குகள் என அந்த படம் குறித்த விளம்பரங்கள் இரண்டு மூன்று மாதங்களாகவே தமிழ்நாட்டில் களமிறங்குவது வழக்கம். நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் உடையில் ரஜினி மிரட்டவுள்ள நிலையில், ரஜினியின் புகைப்படம் பட்டாசுகளில் பொறிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.


Click it and Unblock the Notifications