ஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம்.. சசிகலாவை சீண்டிய தர்பார்.. அனல் பறக்கும் வசனங்கள்! #DarbarThiruvizha
Recommended Video
சென்னை: காசு இருந்தா ஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம் என சசிகலாவை விமர்சித்து தர்பார் படத்தில் டயலாக் இடம் பெற்றுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதனை ரஜினி ரசிகர்கள் திரையரங்கிலும் டிவிட்டரிலும் மாஸாக கொண்டாடி வருகின்றனர்.
70 வயதிலும் ரஜினி செம கெத்தாகவும் ஸ்டைலாகவும் நடித்திருப்பதாக படத்தை பார்த்த ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். ரஜினி சும்மா கிழித்திருக்கிறார் என்றும் ரஜினியின் நடிப்பு மற்றும் வேகம் குறித்து பிரமிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கேம் ஆடுறாங்க..
ரஜினி படத்தின் ட்ரெயிலர் வெளியான போதே அரசியல் டயலாக்குகள் இருப்பதாக பேச்சு எழுந்தது. ஒரிஜினலாவே நான் வில்லன்மா.. கேம் ஆடுறாங்க.. நம்மக்கிட்டயே போன்ற டயலாக்குகள் அரசியல் ரீதியாக பார்க்கப்பட்டது.

சிறையில் சசிகலா
இந்நிலையில் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்தில் சசிகலா குறித்த டயலாக் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வெளியான வீடியோ
இவர் ஜெயிலில் இருந்து அடிக்கடி வெளியில் சென்று ஷாப்பிங் செய்து வருவதாக அப்போதைய சிறை டிஜிபியான தீபா புகார் அளித்தார். இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸாக ரஜினி
இந்நிலையில் இன்று சிறப்புக் காட்சியுடன் வெளியான ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்து வசனம் இடம் பெற்றுள்ளது. தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார்.

சவுத் இந்தியால கூட..
படத்தில் காசு இருந்தா ஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம் என்ற விமர்சனம் இடம் பெற்றுள்ளது. சவுத் இந்தியால கூட ஒரு கைதி அடிக்கடி ஜெயில்ல இருந்த வெளியே ஷாப்பிங் போனதா செய்தியில் பார்த்தேன் என்ற டயலாக் சசிகலாவை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்றுதுள்ளது.

கமல் விமர்சனம்
இந்த வசனத்தை ஜெயில் அதிகாரி ஒருவர் பேச, நடிகர் ரஜினிகாந்த் ஓ.. என கேட்பதாக உள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் இரண்டில் நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன், சசிகலா ஷாப்பிங் சென்றதை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











