தர்பார் பட வசூல் விவகாரம்.. விநியோகஸ்தர்கள் மிரட்டல்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ஏ.ஆர். முருகதாஸ்!
Recommended Video
சென்னை: தர்பா படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தனது அலுவலகத்துக்கு வந்து தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஏ.ஆர். முருகதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி 9ம் தேதி திரைக்கு வந்த படம் தர்பார்.

தர்பார் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதாக லைகா நிறுவனம் 150 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் என அதிகாரப்பூர்வமாக போஸ்டர் போட்டது.
ஆனால், அதன் பின்னர், தர்பார் வசூல் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாக வில்லை. இந்நிலையில், தர்பார் படம் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்ட நிலையில், தற்போது, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அலுவலகம் மற்றும் வீட்டை முற்றுகையிட்டு விநியோகஸ்தர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனராம்.
இதனால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், முருகதாஸின் மனு மீது காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்தது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











