ரஜினி ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்.. தர்பார் ரிலீஸ் தேதியுடன் ‘டும் டும்’ பாடல் புரொமோ வெளியீடு!

சென்னை: தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள 'டும் டும்' பாடல் புரொமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படம் வரும் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.

அந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'டும் டும்' பாடல் புரொமோ வீடியோ தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தற்போது வெளியாகியுள்ளது.

திடீர் சர்ப்ரைஸ்

தர்பார் படத்தின் டும் டும் பாடல் புரொமோ வீடியோவை லைகா நிறுவனம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென தற்போது ரிலீஸ் செய்து சூப்பர்ஸ்டார் ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது.

டிரெண்டிங்

ரஜினியின் தர்பார் பாடல் வெளியான மறுகணமே சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் ட்விட்டரில் #DummDumm என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

எதிர்பார்க்கலல

தர்பார் பாட்டு இப்படி திடீரென வந்து சர்ப்ரைஸ் தரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. அதை குறிப்பிடும் வகையில் இந்த ரசிகர்க எதிர்பார்க்கலல.. வெயிட்டு என கமெண்ட் செய்துள்ளார்.

இப்படியே மெயின்டெயின் பண்ணு

அப்டேட்ஸ் தருவதில் சன் பிக்சர்ஸ் அளவுக்கு லைகா இல்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. இதை இப்படியே மெயின்டெயின் பண்ணு என லைகா நிறுவனத்துக்கு இந்த ரசிகர் கோரிக்கை வைத்துள்ளார்.

எப்போ ரிலீஸ்

தர்பார் படம் வரும் 9ம் தேதி வெளியாகும் என பாடல் புரொமோவுடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பொங்கல் விடுமுறையை கருத்தில் கொண்டு மொத்தம் 10 நாட்கள் கல்லா கட்ட லைகா நிறுவனம் மாஸ்டர் பிளான் போட்டுள்ளது.

காப்பி பாட்டு

கபாலி படத்தில் வரும் "வாடி என் தங்கசிலை" மற்றும் பேட்ட படத்தில் வரும் ஆஹா கல்யாணம் பாடல்கள் போன்றே இருக்கிறது என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

செம ஸ்டெப்

இந்த பாடல் புரொமோவில் சூப்பர்ஸ்டார் ஆடும் ஆட்டம் பலரையும் ஈர்த்த் வருகிறது. செம ஸ்டெப் என்றும், ராக்கிங் ஸ்டெப் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X