சர்கார் முதல் நாள் வசூலை தர்பார் பீட் பண்ணுமா? டிரெண்டாகும் #MasterOfOpeningVIJAY!
Recommended Video
சென்னை: சர்கார் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை ரஜினிகாந்தின் தர்பார் பீட் பண்ணாது. எப்பவுமே மாஸ்டர் ஆஃப் ஓபனிங் விஜய் தான் #MasterOfOpeningVIJAY என்ற ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கோலிவுட்டை பொறுத்தவரையில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் விஜய்க்கு அடுத்த இடத்தில் தான் ரஜினி இருக்கிறார் என்றும் விஜய் ரசிகர்கள் ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
தர்பார் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், பிகில், சர்கார் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை தர்பார் முறியடிக்காது என்றும் தெரிவித்து வருகின்றனர்.
பாக்ஸ் ஆஃபிஸ்
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங் விஜய் தான் என தளபதி ரசிகர்கள் #MasterOfOpeningVIJAY என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
சோஷியல் மீடியா
தர்பார் படம் இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருந்தாலும், சோஷியல் மீடியாவுல தளபதி விஜய் தான் கிங் என பாகுபலி மீம் போட்டு விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.
சர்கார்
2018ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சர்கார் படத்தின் முதல் நாள் வசூலான 32 கோடி ரூபாய் கலெக்ஷனை இதுவரை எந்த உச்ச நடிகர்கள் படமும் பீட் செய்யவில்லை என விஜய் ரசிகர்கள் ட்வீட் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
மாஸ்டர்
நடிகர் விஜய்யின் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை விஜய்யின் மாஸ்டர் படம் வெளியானால் தான் முறியடிக்க முடியும் என்றும் தர்பார் படம் முறியடிக்காது என்றும் விஜய் ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.
தளபதி டா
வெறும் டிரைலர் செலிபிரேஷனுக்கே தளபதி ரசிகர்களோட கூட்டத்தையும் வெறியையும் பாருங்க என இந்த வெறித்தனமான விஜய் ரசிகர் பதிவிட்டுள்ளார்.
பைத்தியம்
தர்பார் படம் பார்த்து பைத்தியமா ஆயிட்டான் போல, போய் ஹாஸ்பிட்டல்ல சேருங்க டோய் எனவும் தர்பார் படம் குறித்த மரண ட்ரோல்களை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
சோலோ ரிலீஸ்
தர்பார் சோலோ ரிலீஸ் ஆனால் பிகிலோட முதல் நாள் வசூலை கூட பீட் பண்ண முடியலைன்னு விஜய் ரசிகர்கள் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஷங்கர்
மெர்சல் ரெக்கார்டை கூட தர்பார் படம் பீட் பண்ணாது போல இருக்கு என்றும், ஷங்கரை வெச்சே ஒன்னும் பண்ண முடியல தளபதியோட தமிழ்நாட்டு ரெக்கார்டுகளை என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications