twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னடா தர்பாருக்கு வந்த இப்படியொரு சோதனை.. தியேட்டரில் மட்டுமில்ல.. அங்கேயும் சரியா ஓடலையாம்!

    |

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தர்பார் திரைப்படம் டிவி ஒளிபரப்பில் சரியாக போகவில்லை என்ற ரிப்போர்ட் வெளியாகி இருக்கிறது.

    Recommended Video

    Nayanthara Donation for FEFSI Workers |Vignesh Shivan |Lock Down

    பொதுவாக புதுப்படங்கள் பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டால் அதன் டி.ஆர்.பி ரேட்டிங் மற்ற படங்களை விட அதிகமாகவே இருக்கும்.

    அதுவும் ரஜினி படங்களின் டி.ஆர்.பி ரேட்டிங் சொல்லவே வேண்டாம். இந்நிலையில், தர்பார் படத்தின் டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்துள்ளது அவரது ரசிகர்களை வருத்தமடைய செய்திருக்கிறது.

    நானும் என் அப்பா அம்மாவும் ரொம்பவே எமோஷனல் ஆயிட்டோம்.. சில்லுக்கருப்பட்டியை புகழ்ந்த பிரபல நடிகை!நானும் என் அப்பா அம்மாவும் ரொம்பவே எமோஷனல் ஆயிட்டோம்.. சில்லுக்கருப்பட்டியை புகழ்ந்த பிரபல நடிகை!

    தியேட்டரில் ஓடவில்லை

    தியேட்டரில் ஓடவில்லை

    லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வந்த படம் தர்பார். விமான விளம்பரங்கள் என படத்தின் ரிலீசுக்கு முன்னாள் ஏற்பட்ட பரபரப்பு படத்தின் ரிலீசுக்கு பிறகு காணாமல் போனது.

    சாதனை செய்யவில்லை

    சாதனை செய்யவில்லை

    கடந்த ஏப்ரல் 14ம் தேதி சன் டிவி 27 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக தர்பார் திரைப்படம் முதல் முறையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், டி.ஆர்.பி ரேட்டிங்கில், தர்பார் படம் எதிர்பார்த்த அளவுக்கு எந்தவொரு சாதனையையும் செய்யவில்லை. அதே வாரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான காஞ்சனா 3 டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.

    ரசிகர்கள் ஏமாற்றம்

    ரசிகர்கள் ஏமாற்றம்

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி உள்ள நிலையில், தர்பார் படம் சொதப்பியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்த நிலையில், லேட்டஸ்ட்டாக வெளியாகி உள்ள இந்த டி.ஆர்.பி ரேட்டிங் ரஜினி ரசிகர்களை மேலும் ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.

    டாப் 5

    டாப் 5

    லாக்டவுன் காரணமாக புதிய சீரியல்களை சன் டிவி ஒளிபரப்பாத நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கில் அவை இடம் பெறவில்லை. முதலிடத்தில் காஞ்சனா 3 திரைப்படம் 15184000 புள்ளிகளுடனும், இரண்டாம் இடத்தில் தர்பார் 14593000 புள்ளிகளுடனும், மூன்றாம் இடத்தில் சீமராஜா 13456000 புள்ளிகளுடனும் முன்னிலை வகிக்கின்றன. அடுத்த இடங்களில் திமிரு புடிச்சவன் மற்றும் இருட்டு படங்கள் டாப் 5 ரேட்டிங்கில் இடம்பிடித்துள்ளன.

    அண்ணாத்த எப்படி?

    அண்ணாத்த எப்படி?

    தர்பார் படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கியிருந்த விஸ்வாசம் திரைப்படம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் 18143000 புள்ளிகளை பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. விஸ்வாசத்தின் ரெக்கார்டை அண்ணாத்த படமாவது பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Well, looks like the Rajinikanth movie didn't impress the mini-screen audience, as in the TRP race, Kanchana 3 topped the impression list.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X