Darbar: தர்பார் போஸ்டரை பார்த்ததும் ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு
Recommended Video

சென்னை: தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நாளை மும்பையில் துவங்குகிறது.
இந்நிலையில் பட போஸ்டர் குறித்தும், ரஜினியின் லுக் பற்றியும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ரஜினி
தர்பார் படத்தில் ரஜினியின் லுக்கை பார்த்தால் பேட்டயை பார்த்தது போன்றே உள்ளது. பேட்டக்கும், தர்பார் ரஜினிக்கும் இடையே உள்ள வித்தியாசம் அந்த கண்ணாடி தான்.

தர்பார்
தர்பார் பட போட்டோஷூட்டின்போது எடுத்த புகைப்படங்கள் கசிந்தன. அதை பார்த்தபோது இதில் என்ன கசிய வேண்டி இருக்கு, இது பேட்ட பட போட்டோக்கள் என்று விமர்சனம் எழுந்தது. அதன் பிறகு காலில் இருந்த போலீசாரின் ஷூவை வைத்து தான் அது தர்பார் என்று தெரிய வந்தது.

காப்பி
ரஜினியின் லுக் தான் பேட்ட போன்று இருக்கிறது என்றால் தர்பார் பட போஸ்டர் ஹாலிவுட் படமான Killing Gunther-ல் இருந்து சுடப்பட்டுள்ளது. என்ன முருகதாஸ் சார், ஆரம்பமே காப்பியா? என்று சமூக வலைதளங்களில் கேள்வி கேட்கிறார்கள்.

முருகதாஸ்
லுக், போஸ்டர் என்று அடுத்தடுத்து காப்பியாக உள்ளது கதை உங்க கதையாக இருக்கும் என்று நம்புகிறோம். இல்லை என்றால் அதுவும் என் கதை என்று யாராவது வருவார்களா?. கதை குறித்த தகவல் வெளியான பிறகு தான் அது எந்த வகை என்பது தெரியும். பாவம், முருகதாஸ் ரஜினிக்காக தீயாக யோசித்து வேலை செய்தால் இப்படி சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்களே. யார் கலாய்த்தால் என்ன அவர் யாருக்கும் அஞ்சாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











